Header Logo

வணிகம்
Fems இனால் வலுவூட்டப்படும் ‘Purple Bin’ இனால் பாடசாலை மாணவிகளுக்கு பாதுகாப்பாக பயன்படுத்திய அணையாடைகளை கழிவகற்றும் வசதி

Feb 9, 2026 - 10:57 AM -

0

Fems இனால் வலுவூட்டப்படும் ‘Purple Bin’ இனால் பாடசாலை மாணவிகளுக்கு பாதுகாப்பாக பயன்படுத்திய அணையாடைகளை கழிவகற்றும் வசதி

ஹேமாஸ் கொன்சியூமர் பிரான்ட்ஸ் நிறுவனத்தின் முன்னணி பெண்கள் சுகாதாரப் பாதுகாப்பு வர்த்தகநாமமான Fems, காலி - படதுவ ஸ்ரீ ரதனஜோதி மகா வித்தியாலயத்தில் The Purple Bin திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இது ஒவ்வொரு இலங்கை பெண் மற்றும் சிறுமிக்கும் மாதவிடாய் சுகாதாரம் எளிதில் கிடைப்பதையும், பாதுகாப்பானதாகவும், கண்ணியமானதாகவும் அமைவதை உறுதி செய்வதில் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. 

மாதவிடாய் சுகாதாரத்தில் மிகவும் முக்கியமான, ஆனால் கவனிக்கப்படாத ஒரு தடையான ‘பாதுகாப்பான மற்றும் கண்ணியமான கழிவகற்றல்’ முறையை The Purple Bin Project கையாள்கிறது. முறையான வசதிகள் இல்லாதபோது, மாணவிகள் தங்களது மாதவிடாய் காலத்தில் சௌகரியம் மற்றும் தன்னம்பிக்கை இழக்க நேரிடும் சவால்களைக் கருத்திற்கொண்டு, பாடசாலைகளில் நம்பகமான தீர்வுகளை வழங்க இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் நப்கின்களை பாதுகாப்பாகச் சேகரித்து அப்புறப்படுத்துவதற்காக, மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் (CEA) அங்கீகரிக்கப்பட்ட Sisili Hanaro Encare (Private) Limited உடன் Fems கைகோர்த்துள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடனான பொது-தனியார் பங்களிப்பின் கீழ் இயங்கும் இந்நிறுவனம், இலங்கையின் மிகப்பெரிய மருத்துவக் கழிவு முகாமைத்துவ நிலையத்தை நிர்வகிக்கிறது. 

2026 ஜனவரி 30 ஆரம்பிக்கப்படவுள்ள இந்தத் திட்டத்தின் முதற்கட்டமானது, தெரிவு செய்யப்பட்ட 20 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்கீழ் ஒவ்வொரு பாடசாலையும் தெளிவான பயன்பாட்டு வழிகாட்டுதல்களுடன் கூடிய பிரத்தியேக அப்புறப்படுத்தும் கழிவகற்றும் தொட்டிகளை, Fems நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்வதுடன், முறையான கழிவகற்றல் நடைமுறைகளை உறுதி செய்வதற்காக கழிவறை வசதிகளில் அறிவுறுத்தல் அறிவிப்புகளும் காட்சிப்படுத்தப்படும். அத்துடன், சுகாதாரத்தையும் கௌரவத்தையும் பேணும் வகையில் Encare நிறுவனத்தினால் சுகாதாரக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அகற்றப்படும். அவ்வாறு சேகரிக்கப்படும் சுகாதாரத் நப்கின்கள் மீள்சுழற்சி செய்யப்பட்டு, சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களாகப் பயன்படுத்தக்கூடிய பசுமைச் செங்கற்களாக (Eco-friendly bricks) மாற்றப்படும். இந்த முன்னோடித் திட்டமானது, நாடு தழுவிய ரீதியில் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான தெளிவான வழிகாட்டியாக அமையும். 

ஹேமாஸ் கொன்சியுமர் பிரான்ட்ஸ் பெண்கள் சுகாதாரத் தூய்மைப் பிரிவிற்கான பொது முகாமையாளர் சச்சினி கமகே கருத்துத் தெரிவிக்கையில், “பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தும் வசதிகள் இல்லாதது, நீண்டகாலமாக சிறுமிகள் தங்களது கல்வியில் முழுமையாக ஈடுபடுவதைத் தடுக்கும் புலப்படாத தடையாக இருந்து வருகிறது. The Purple Bin Project இந்த இடைவெளியை நேரடியாகக் கையாள்வதுடன், இலங்கை முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவிகளின் கண்ணியத்தையும் தன்னம்பிக்கையையும் மீட்டெடுக்கும் ஒரு நடைமுறைத் தீர்வை வழங்குகிறது. இந்த முயற்சி, முழுமையான மாதவிடாய் சுகாதாரப் பராமரிப்பு குறித்த எமது தொலைநோக்குப் பார்வையை நிறைவு செய்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு சிறுமிக்கும் தயாரிப்புகள் மற்றும் அறிவு மட்டும் கிடைப்பதை உறுதி செய்யாமல், அவர்களின் மாதவிடாய் சுகாதாரத்தை நம்பிக்கையுடன் கையாள்வதற்குத் தேவையான முழுமையான உள்கட்டமைப்பு வசதிகளையும் கிடைக்கச் செய்கிறோம்.” என்றார். 

குறைந்த விலையிலான Fems Aya சுகாதாரத் நப்கின்களை அறிமுகப்படுத்தியதுடன், 2023 மே மாதத்தில் H.E.R Foundation ஐ நிறுவியதிலிருந்து, இலங்கையின் மாதவிடாய் சுகாதார நிலையை மாற்றியமைக்க Fems முறையாகப் பணியாற்றி வருகிறது. பல்வேறு சமூகங்களுடனான விரிவான நேரடித் தொடர்புகள் மூலம், மாதவிடாய் சுகாதாரம், கல்வி, குறைந்த விலை, சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் நான்கு முக்கிய தடைகளை Fems இனங்கண்டுள்ளது. சமூகத்தில் நிலவும் தவறான கண்ணோட்டங்கள் மற்றும் தவறான தகவல்களைக் இல்லாமல் செய்வதற்காக, விரிவான மாதவிடாய் சுகாதாரக் கல்வித் திட்டங்களை Fems தொடர்ந்து முன்னெடுக்கிறது. இதன் மூலம் இதுவரையில் நாடு முழுவதும் 300,000-க்கும் அதிகமான பெண்கள் பயனடைந்துள்ளனர். அத்துடன், கட்டுப்படியாகும் விலையில் தயாரிப்புகளை வழங்குவதை உறுதி செய்யும் வகையில், Fems Aya அறிமுகப்படுத்தப்பட்டது. இது நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உயர்தர சுகாதார நப்கின்களை குறைந்த விலையில் கிடைக்கச் செய்கிறது. 

தயாரிப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதுடன் முறையான வசதிகளும் வழங்கப்பட வேண்டும் என்பதை அங்கீகரிக்கும் விதமாக, பாடசாலைகளில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக Teejay போன்ற அமைப்புகளுடன் Fems கைகோர்த்துள்ளது. The Purple Bin Project பாதுகாப்பான மற்றும் கண்ணியமான அப்புறப்படுத்துதலில் உள்ள இறுதித் தடையை நீக்குவதுடன், மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான Fems-இன் முழுமையான அணுகுமுறையை நிறைவு செய்கிறது. 

Fems பற்றி: 

பெண்கள் மாதவிடாய் சுகாதார அணையாடை வர்த்தக நாமமாக 2004 ஆம் ஆண்டில் Fems ஆரம்பிக்கப்பட்டது. பெண்களுக்கு சுதந்திரமாகவும், சமூகமட்டத்தில் காணப்படும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு வெளியில் வருவதற்கும் கைகொடுப்பதை இலக்காகக் கொண்டு செயலாற்றுகின்றது. 

சிக்கனமான, உயர் தரம் வாய்ந்த சுகாதார அணையாடைகளை சகல நிலைகளையும் சேர்ந்த பெண்களுக்கு இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியை வழங்குவதற்கு Fems தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது தயாரிப்பு தெரிவுகளில் Aya தயாரிப்புகளையும் உள்ளடக்கியுள்ளது. தரத்தில் கவனம் செலுத்துவதுடன், சிக்கனமான தயாரிப்புகளை நாடும் நுகர்வோருக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆழமான புரிந்துணர்வு மற்றும் கரிசனையுடன், அதிகரித்துச் செல்லும் பெண்களுக்கான மாதவிடாய் தூய்மை தேவைகளை நிவர்த்தி செய்வதில் Fems கவனம் செலுத்தி, அவர்களுக்கு சௌகரியமாகவும், நம்பிக்கையுடனும், ஆதரவுடனும் திகழ்வதை உறுதி செய்ய பங்களிப்பு வழங்குகின்றது. பெண்கள் மாதவிடாய் கால பராமரிப்பு தயாரிப்புகளை வழங்குவதில் Fems தன்னை உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது. 

மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பில் பெண்களுக்கு விழிப்புணர்வூட்டுவதை தனது வர்த்தக நாம நோக்காகக் கொண்டு, மாதவிடாய் தொடர்பில் நிலவும் மூட நம்பிக்கைகளை இல்லாமல் செய்வதிலும் கவனம் செலுத்துகின்றது. பெண்களின் ஆற்றலில் நம்பிக்கை கொண்டு, அவர்களின் பயணத்துக்கு ஆதரவளித்து, அவர்களின் வலிமையை கொண்டாடும் நாமமாகவும், வலுவூட்டலின் அடையாளமாகவும் Fems திகழ்கின்றது. 

மேலதிக தகவல்களுக்கு, பார்வையிடவும் https://hemas.com/brands/fems.html.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title