Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஓமானை இலகுவாக வீழ்த்திய சிம்பாப்வே!

Feb 9, 2026 - 06:10 PM -

0

ஓமானை இலகுவாக வீழ்த்திய  சிம்பாப்வே!
Mobitel inner

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே அணி 08 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. 

கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 103 ஓட்டங்களை பெற்றது. 

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Vinayak Shukla அதிகபட்சமாக 28 ஓட்டங்களையும், Sufyan Mehmood 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். 

பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பில் Richard Ngarava, Blessing Muzarabani, Brad Evans ஆகியோர் தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். 

பின்னர் 104 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 13.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Brian Bennett அதிகபட்சமாக 48 ஓட்டங்களையும், Brendan Taylor 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

பந்து வீச்சில் ஓமான் அணி சார்பில் Sufyan Mehmood 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara