Feb 9, 2026 - 10:26 PM -
0
இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) புதிய பணிப்பாளராக Shannon Cowlin நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (09) கொழும்பில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பணியாற்றிய 13 ஆண்டுகள் உட்பட, Cowlin 26 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை அனுபவம் கொண்ட ஒரு அதிகாரியாவார்.
வலுசக்தி, காலநிலை, சுற்றுச்சூழல், காற்றின் தரம், பொது சுகாதாரம் மற்றும் உணவு-நீர் ஆகிய துறைகளில் முதலீட்டுத் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் கொள்கை விடயங்களில் அவர் நிபுணத்துவம் பெற்றவர்.
அவர் 2023 ஆம் ஆண்டு முதல் ஆசிய அபிவிருத்தி வங்கியின் மங்கோலியாவுக்கான வதிவிடப் பிரதிநிதித்துவத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியில் இணைவதற்கு முன்னர், அமெரிக்காவின் தேசிய மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆய்வகத்தில் மேலாளராகப் பணியாற்றிய அவர், அங்கிருந்து அமெரிக்கா-இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்திய வலுசக்தி ஒத்துழைப்பு முயற்சிகளை வழிநடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

