Header Logo
Mogo Academy

விளையாட்டு
தென்னாப்பிரிக்க அணி 57 ஓட்டங்களால் வெற்றி

Feb 9, 2026 - 10:50 PM -

0

தென்னாப்பிரிக்க அணி 57 ஓட்டங்களால் வெற்றி
Mobitel inner

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் கனடா அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 57 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. 

அகமதாபாத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கனடா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 213 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணித்தலைவர் Aiden Markram அதிகபட்சமாக 59 ஓட்டங்களையும், David Miller ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும், Tristan Stubbs 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

பந்து வீச்சில் கனடா அணி சார்பில் Ansh Patel 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

பின்னர் 214 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. 

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Navneet Dhaliwal அதிகபட்சமாக 64 ஓட்டங்களை பெற்றதுடன், Harsh Thaker 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

பந்து வீச்சில் தென்னாப்பிரிக்க அணி சார்பில் Lungi Ngidi 04 விக்கெட்டுக்களையும், Marco Jansen 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara