Header Logo

இந்தியா
அஜித்குமார் கொலை வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

Feb 10, 2026 - 10:27 AM -

0

அஜித்குமார் கொலை வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் காவலாளியாக அஜித்குமார் (வயது 28) என்பவர் பணி யாற்றினார். 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த கோவிலுக்கு மதுரையை சேர்ந்த பேராசிரியை நிகிதா, தனது தாயாருடன் தரிசனம் செய்ய காரில் சென்றார். 

அப்போது அங்கு அஜித்குமார் பணி யில் இருந்தார். காரை பார்க் செய்த விவகாரத்தில் நிகிதாவுக்கும், அஜித்குமாருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் தரிசனம் முடித்து வந்த நிகிதா, தனது காரில் இருந்த சுமார் 10 பவுன் நகை மாயமானதாகவும் அதற்கு அஜித்குமார்தான் காரணம் எனவும் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். 

அதன்பேரில் திருப்புவனம் பொலிஸார் விசாரணை நடத்திய நிலையில், இந்த புகாரை தாங்கள் விசாரிப்பதாக மானாம துரை தனிப்படை பொலிஸார் கையில் எடுத்தனர். 

அதன்பேரில் அஜித்குமார் உள்ளிட்ட சிலரை அழைத்து விசாரித்தனர். மற்றவர்களை விடுவித்துவிட்டு அஜித்குமாரை மட்டும் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று 2 நாட்களாக கடுமையாக தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்து இறந்துவிட்டார். 

இதையடுத்து மானாமதுரை தனிப்படை பொலிஸார் ஐவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. 5 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

அடுத்த நடவடிக்கையாக பொலிஸ் வாகன சாரதி ராமச்சந்திரன் என்பவரும் கைது செய்யப்பட்டார். காவலாளி அஜித்குமார் கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. 

இதற்கிடையே இந்த கொலையில் தொடர்புடைய பொலிஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. சி.பி.ஐ. விசாரணை செய்து மதுரை மாவட்ட கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 

மானாமதுரையில் அப்போது துணை பொலிஸ் சூப்பி ரண்டாக பணியாற்றிய சண்முகசுந்தரம், திருப்புவனம் பொலிஸ் இன்ஸ் பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட 4 பேரும் மீதும் குற்றச்சாட்டுகள் எழுப்பப் பட்டு இருந்தன. இந்த வழக்கில் அதிகாரிகள் உள்பட மொத்தம் 10 பொலிஸார் சேர்க்கப்பட்டு உள்ளனர். 

இதனையடுத்து கடந்த 4-ம் நடந்த விசாரணையின்போது அஜித்குமார் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டு உள்ளது. நகை திருட்டு என அவர் மீது பேராசிரியை நிகிதா அளித்தது பொய் புகார் என சி.பி.ஐ. அளித்த தகவலை தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அறிவுறுத்தினார். 

இந்த நிலையில் அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதாவை நேரில் அழைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நிகிதாவை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

title