Feb 10, 2026 - 01:13 PM -
0
இலங்கையின் 100% ஆன்டிபயாட்டிக் இ ல்லாத கோழி இறைச்சி உற்பத்தியாளராக திகழும் ஒரே நிறுவனமான நியூ அன்தோனீஸ் ஃபார்ம்ஸ் [New Anthoney’s Farms,]ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான கோழி இறைச்சியினை குடும்பங்களுக்கு வரும் நிலையில் தற்போது இச்சேவையின் 40 ஆண்டுகளை கொண்டாடுகிறது..1986ஆம் ஆண்டில் தலைவர் எமில் ஸ்டான்லி மற்றும் அவரது பாரியாரான , பணிப்பாளர் திருமதி எஸ். எம். டி. மாரி சீதா லக்ஷ்மீஆகியோர் குடும்பங்களுக்கு தரமான கோழி இறைச்சியினை வழங்க வேண்டும் என்ற எளிய உறுதிமொழியுடன் தொடங்கிய இந்த முயற்சியானது , இன்று வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கமைய , அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப , இலங்கையின் மிகப் பாதுகாப்பான கோழி இறைச்சியினை வழங்குவதற்கான தொடர்ச்சியான புதுமைப் பயணமாக வளர்ச்சியடைந்துள்ளது.
1,000 கோழிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தை, எமில் மற்றும் மாரி, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு, படிப்படியாக வளர்ச்சியடையச்செய்தனர். குடும்பங்களின் தேவைகளை புரிந்து கொண்டு, அதற்கேற்ப பண்ணை செயல்பாடுகளை விரிவுபடுத்தி, செயலாக்க நிலையங்களை அமைத்து, குளிர்சாதன சேமிப்பு வசதிகளை உருவாக்கி, தீவன உற்பத்தி பிரிவுகளையும் அமைத்தனர்..இன்று, இந்த வாடிக்கையாளர் மைய அணுகுமுறை, ஹரிதஹரி (HarithaHari) என்ற முக்கிய தயாரிப்பு வரிசை, கிரிஸ்பிஸ் (Crizzpys) மற்றும் ஃப்ரென்சீஸ் (Frenchys) போன்ற புதுமையான பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புகள், மீட்லரி (Meatlery) என்ற நவீன சில்லறை விற்பனை சங்கிலி, மற்றும் தொரகடபாளிய (Dorakadapaliya) மூலம் வழங்கப்படும் நாடு முழுவதுமான இலவச விநியோகம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு முழுமையான சூழலமைப்பாக உருவெடுத்துள்ளது—இவை அனைத்தும் இலங்கை குடும்பங்களை மேலும் சிறப்பாக சேவையளிக்க உருவாக்கப்பட்டவையாகும்.
வாடிக்கையாளர்களுக்கான தங்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், 2025 நவம்பரில் நிறுவனம் சிக்கன் ஹேவன்ஸ் (Chicken Havens) எனும் உயர்தர எட்டு தயாரிப்புகள் கொண்ட புதிய வரிசையை அறிமுகப்படுத்தி, ஒரு முக்கிய விரிவாக்கத்தை அறிவித்தது. இந்த முதலீடு, நாற்பது ஆண்டுகளுக்கு முன் எமில் மற்றும் மாரி நிறுவிய தரநிலைகளை பேணிக்கொண்டு, தொழில்முறை சமையலறைகளுக்கு பெரிய அளவில் சேவை செய்யும் நிறுவனத்தின் திறனை வெளிப்படுத்துகிறது.
குடும்பங்களை மையமாகக் கொண்ட புதுமைகளை முன்னோடியாக அறிமுகப்படுத்தும் நிறுவனமாக, இலங்கையின் முதல் திடீர் உறைபனி கிரிஸ்பி கோழி தயாரிப்பான கிரிஸ்பிஸ் (Crizzpys) மற்றும் தொரகடபாளிய (Dorakadapaliya) வீட்டு விநியோக சேவையையும் தரமான தயாரிப்புகளை நேரடியாக வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கே கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தலைவர் மற்றும் முகாமைத்துவப்பணிப்பாளரான எமில் ஸ்டான்லி தெரிவிக்கையில்: “1,000 கோழிகளுடன் மற்றும் குடும்பங்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் இந்த நிறுவனத்தை ஆரம்பித்த நாம் இன்று இலங்கையின் நிலைத்த கோழி உற்பத்திக்கான முன்மாதிரியை உருவாக்கியுள்ளோம். எமது சாதனைகள், தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்திற்கு அளித்த பங்களிப்புகளாகும்; அவை வரும் தலைமுறைகளுக்கும் பயன் அளிக்கும். நாம் எப்போதும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சேவையினை வழங்கிஇன்று வளர்ச்சியடைந்துள்ளோம். மற்றும் குடும்பங்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டே முடிவுகளை எடுத்தோம்—இதுவே நாற்பது ஆண்டுகளாக எங்களை வழிநடத்திய கொள்கையாகும்.”
வாடிக்கையாளர்களுக்கான இந்த அர்ப்பணிப்பு, இலங்கையின் மிக விரிவான சான்றிதழ் அடிப்படையிலான அங்கீகாரங்களால் ஆதரிக்கப்படுகிறது. 26வது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் நிகழ்வில், செயலாக்கப்பட்ட உணவு பிரிவில் சிறந்த ஏற்றுமதியாளர் என்ற விருதை நியூ அன்தோனீஸ் நிறுவனம் பெற்றது.
மேலும், FSSC 22000 சான்றிதழைப் பெறும் இலங்கையின் முதல் கோழி உற்பத்தியாளர் என்ற பெருமையையும், ISO 14064-1:2018 தரநிலையின் கீழ் இலங்கையின் ஒரே பசுமை வீச்சு வாயு (Greenhouse Gas) சரிபார்ப்பு அறிக்கையையும் பெற்றுள்ளது.
பொறுப்பான தீவன மூலப்பெறுதலை உறுதிப்படுத்தும் “Sustainable U.S. Soy” லேபிளை ஏற்றுக் கொண்ட தெற்காசியா மற்றும் சஹாரா தென் பகுதி ஆப்பிரிக்காவின் முதல் நிறுவனம் என்ற சாதனையையும், ஹரிதஹரி (HarithaHari) தயாரிப்பு வரிசைக்காக 100% உரமாக மாறக்கூடிய, தாவர அடிப்படையிலான பொதிகளை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனமாகவும் நியூ அன்தோனீஸ் திகழ்கிறது—இவை அனைத்தும், ஒவ்வொரு தயாரிப்பிலும் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான நம்பிக்கையை வழங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவையாகும்.
இதுகுறித்து நியூ அன்தோனீஸ் ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் சுரவீர தெரிவிக்கையில்:
“எமது 40 ஆண்டுகால பயணம், இலங்கையின் குடும்பங்களுக்கு மிகப் பாதுகாப்பான கோழிஇறைச்சியை வழங்க வேண்டும் என்ற எமது உறுதியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. உற்பத்தி, சில்லறை விற்பனை மற்றும் புத்தாக்கம் ஆகிய அனைத்துத் துறைகளிலும், வாடிக்கையாளர்களின் தேவைகளை கவனமாகக் கேட்டு, உயர்ந்த இலக்குகளுடன் செயல்பட்டு வருகிறோம். எமது திட்டங்களில் உள்ள ஒவ்வொரு முயற்சியும் ஒரே கோட்பாட்டை வலியுறுத்துகிறது—இலங்கை குடும்பங்கள் மிக உயர்தரமான, பாதுகாப்பான கோழி தயாரிப்புகளை பெறத் தகுதியுடையவர்கள், அதனை வழங்குவதில் வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக இருந்து செயல்படுவதே எமது உறுதிமொழியாகும்.”
மேலும், இந்த நிறுவனம் HACCP, GMP, ISO 22000 ஆகிய சான்றிதழ்களையும், உள்நாட்டு மற்றும் சர்வதேச ஹலால் சான்றிதழ்களையும் பெற்றுள்ளது. அதேசமயம், அமெரிக்காவின் National Chicken Council,நிர்ணயித்த விலங்கு நலன் தரநிலைகளை கடைப்பிடித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், வாடிக்கையாளர்களுக்கான தரத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற தனது உறுதியை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க தீவன உற்பத்தியாளர்களில் ஒன்றான கோல்ட் காயின் ஃபீட் மில்ஸ் (லங்கா) நிறுவனத்தை நியூ அன்தோனீஸ் கையகப்படுத்தியது. இதன் மூலம், குஞ்சு வளர்ப்பிலிருந்து குடும்பங்களின் உணவுவரை முழுமையான கண்காணிப்பை நிறுவனம் உறுதி செய்துள்ளது.
பாதுகாப்பான கோழி இறைச்சி தயாரிப்புகளை குடும்பங்களுக்கு வழங்குவதைக் கடந்தும், நுண்ணுயிர் எதிர்ப்பி (Antimicrobial Resistance – AMR) தொடர்பான பொது சுகாதார விழிப்புணர்வில் நியூ அன்தோனீஸ் முன்னணியில் செயல்படுகிறது.
இது குறித்து தலைவர் எமில் ஸ்டான்லி கூறியதாவத“மாரியும் நானும் நுண்ணுயிர் எதிர்ப்பி குறித்து அறிந்தபோது, எமது பொறுப்பு ஆன்டிபயாட்டிக் இல்லாத கோழி உற்பத்தியைத் தாண்டி விரிவடைகிறது என்பதை உணர்ந்தோம்.”
2025 உலக AMR விழிப்புணர்வு வாரத்தின் போது, சுகாதார அமைச்சுடன் இணைந்து, கொள்கை நிர்ணயாளர்கள், சுகாதார நிபுணர்கள் மற்றும் விலங்கு மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொண்ட உயர்மட்ட கருத்தரங்கத்தை நிறுவனம் நடத்தியது. இந்த முயற்சியை ஒவ்வோர் ஆண்டும் தொடர்வதாக நிறுவனம் உறுதியளித்துள்ளதுடன், ஊழியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பாடசாலை -பல்கலைக்கழகங்களில் கல்வி திட்டங்களையும் ஒருங்கிணைந்து முன்னெடுத்து வருகிறது.

