Feb 10, 2026 - 04:45 PM -
0
டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது (09) நடைபெற்று வருகிறது.
சென்னையில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இதன்படி முதலில் துடுப்பாடிய ஐக்கிய அரபு அமீரகம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
ஐக்கிய அரபு அமீரகம் அணி சார்பில் அணித்தலைவர் மொஹமட் வசீம் அதிகபட்சமாக 66 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக மெட் ஹென்றி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்படி, 174 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நியூசிலாந்து அணிக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

