Feb 10, 2026 - 05:06 PM -
0
வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறையை உயர்த்துவதிலும், போக்குவரத்துத்திறனில் சிறந்த அனுபவத்தை அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கச் செய்வதிலும் உறுதிபூண்டுள்ள கொமர்ஷல் வங்கி, ஹேலீஸ் பென்டன்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு மூலோபாய பங்குடைமையில் இணைந்துள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் போக்குவரத்துத்துறை பிரிவான ஹேலீஸ் மொபிலிட்டி லிமிடெட் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சக்தி வாகனங்களுக்கான முழுத் தொகுப்பையும் ஊக்குவிப்பதுடன், இலங்கை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஈர்க்கக்கூடிய மற்றும் எளிதில் அணுகக்கூடிய லீசிங் தீர்வுகளை வழங்கும் வங்கியின் முயற்சிகளையும் மேலும் வலுப்படுத்துகிறது.
இந்த ஒத்துழைப்பானது, 2026 நவம்பர் 30 வரை நடைமுறையில் இருக்கும் ஒரு கூட்டு ஊக்குவிப்புப் பிரசாரத்தை தொடங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மூலம் அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது.
இந்த முயற்சி மூலம், வாடிக்கையாளர்கள் தமது வாகன கொள்வனவுகளை கொமர்ஷல் வங்கியின் நாடு முழுவதும் பரவியுள்ள கிளை வலையமைப்பின் மூலம் பகுதி நிதியுதவியுடன் மேற்கொள்ள முடியும். இதற்கு மேலாக, வாகன உரிமையின் செலவினத்தை குறைக்க உதவும் பல சிறப்பு நன்மைகளும் வழங்கப்படுகின்றன.
வங்கி, போட்டித்தன்மையுள்ள வட்டி வீதங்கள், ஆவணச் செலவுகளுக்கான சலுகைகள், மேலும் முதல் ஆண்டுக்கான ஆண்டு கட்டணம் விலக்கப்பட்ட இலவச கடனட்டையும் வழங்கும் என தெரிவித்துள்ளது. மேலதிகமாக வாடிக்கையாளர்கள் தமது வருமான அமைப்புகளுக்கு ஏற்ப திருப்பிச் செலுத்தும் அட்டவணைகளை தனிப்பயனாக்கிக் கொள்ளும் நெகிழ்வுத்தன்மையையும் பெறுவர். இது, நடைமுறை ரீதியான நியாயமான விலைக்கு வங்கி அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
இந்த நன்மைகளை மேலும் முழுமைப்படுத்தும் வகையில், ஹேலீஸ் மோபிலிட்டி நிறுவனம் முழுமையான உற்பத்தியாளர் உத்தரவாதங்கள், சான்றளிக்கப்பட்ட விற்பனைக்குப் பிந்தைய சேவைகள், அசல் உதிரிப்பாகங்கள் மற்றும் 24/7 வீதி உதவிச் சேவையை அதன் அதிகாரப்பூர்வ தொடர்பிலக்கம் 0112 222 222 மூலம் வழங்குகிறது. நம்பகமான மற்றும் நிலைத்த போக்குவரத்திற்கான தனது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலத்திரனியல் வாகன (EV) மின்னேற்ற உள்கட்டமைப்பு மற்றும் மைக்ரோகிரிட் தீர்வுகளில் உலகளாவிய முன்னணியில் உள்ள StarCharge நிறுவனத்துடன் கொண்டுள்ள பங்குடைமையின் மூலம், நம்பகமான EV மின்னேற்ற தீர்வுகளுக்கான அணுகலை நிறுவனம் விரிவுபடுத்தி வருகிறது. ஹேலீஸ் மொபிலிட்டி சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள வாகன வரிசையில், பயணியர் வாகன பிரிவில் வேகமாக வளர்ந்து வரும் உயர்தர புதிய சக்தி வாகன (NEV)) வர்த்தக நாமமான OJ (Omoda & Jaecoo) அடங்கியுள்ளது. இது, Chery Automobile Co. Ltd. என்ற பெரிய நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படுகிறது. புதிய அறிமுகங்களான Jaecoo J7 PHEV, J6, J8 மற்றும் Omoda E5 ஆகியவை, முழுமையாக மின்சார, பிளக்-இன் ஹைபிரிட் மற்றும் உள் எரிபொருள் இயந்திரம் (ICE) கொண்ட SUV வகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தேர்வுகளை வழங்குகின்றன. இதன் மூலம், பல்வேறு வாழ்க்கை முறைகள் மற்றும் ஓட்டுநர் விருப்பங்களுக்கு ஏற்ப வாகனங்களை தேர்ந்தெடுக்க முடிகிறது.
மேலும், சீனாவின் புகழ்பெற்ற Shineray Motors நிறுவனத்தைச் சேர்ந்த வர்த்தக வாகன வர்த்தகநாமமான SRM-ஐயும் ஹேலீஸ் மோபிலிட்டியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதன் கீழ், இலகு வர்த்தக இலத்திரனியல் வாகனமான SRM T3 EV, ஒன்பது இருக்கைகள் கொண்ட பயணியர் வேன் X30L EV, மற்றும் பெரிய சரக்கு வேன் X30L EV Large Cargo Van ஆகியவை வழங்கப்படுகின்றன.
இந்த வர்த்தகநாமம், புதிய சக்தி அடிப்படையிலான நகர்ப்புற லாஜிஸ்டிக்ஸ் வாகனங்களில் சிறந்து விளங்கும், வேகமாக வளர்ந்து வரும் சீன வாகன உற்பத்தி நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது.
மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

