Feb 10, 2026 - 05:57 PM -
0
உபாதைக்குள்ளான இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க, இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து விலகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற முதலாவது போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாகவே இந்த நிலை உருவாகியுள்ளது.
வனிந்து ஹசரங்கவிற்குப் பதிலாகத் துஷான் ஹேமந்த அணியில் இணைத்துக்கொள்ளப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று வனிந்து ஹசரங்கவிற்கு மேற்கொள்ளப்பட்ட MRI பரிசோதனையின் முடிவில், அவரது உபாதை குணமடையாத காரணத்தினால், அவர் இம்முறை உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்படுவதாகக் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அணி பங்கேற்கும் அடுத்த போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி ஓமான் அணியுடன் பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

