Header Logo

சினிமா
ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் முக்கிய இயக்குநர்!

Feb 11, 2026 - 12:23 PM -

0

ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் முக்கிய இயக்குநர்!

நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் கூட்டணியில் 'ஜெயிலர் 2' திரைப்படம் உருவாகி வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் பல திரைப்பிரபலங்கள் நடிக்கின்றனர். மேலும், ஜெயிலர் படத்தில் நடித்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார். 

ஜெயிலர் 2 படத்தில் முதல் பாகத்தில் இருந்ததை விட அதிக நேரம் திரையில் வரக்கூடிய சாத்தியம் இருப்பதாக நடிகர் சிவராஜ்குமார் கூறியிருந்தார். மேலும், ஜெயிலர் படத்தில் நடித்த பலர், இந்தப் படத்தில் நடிப்பதாக கூறியிருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பலக்கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் ரஜினி சாரும் நானும் நன்றாகப் பழகுவோம். எஸ்.ஜே. சூர்யா அடிக்கடி நகைச்சுவையாகக் பேசுவார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், இருவரும் உறவினர்கள் போல பேச ஆரம்பித்து விடுவார்கள்." 

"அவர் சூப்பர் ஸ்டாராக உயர்வதை நான் மெட்ராசில் பார்த்து வளர்ந்தேன். வெற்றி பெற்றாலும், அவர் யதார்த்தமாகவே இருக்கிறார். அவர் என் தந்தையுடன் நெருங்கிய பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார். பெங்களூரு வருகைதரும் ஒவ்வொரு முறையும், எங்கள் வீட்டிற்கு வருவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்," என்றார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title