செய்திகள்
வனிந்து ஹசரங்கவிற்குப் பதில் துஷான் ஹேமந்த!

Feb 10, 2026 - 10:04 PM -

0

வனிந்து ஹசரங்கவிற்குப் பதில் துஷான் ஹேமந்த!

இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியிலிருந்து, உபாதை காரணமாக விலகியுள்ள சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்கவிற்குப் பதிலாக, துஷான் ஹேமந்தவை அணியில் இணைத்துக்கொள்ளச் சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) அனுமதி வழங்கியுள்ளது. 

 

துஷான் ஹேமந்த இதுவரை 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 3 இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியின் போது வனிந்து ஹசரங்க காலில் உபாதைக்கு உள்ளானார். 

 

இந்நிலையில், நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட MRI பரிசோதனையில் உபாதை குணமடையாதது உறுதி செய்யப்பட்டதால், அவர் இம்முறை உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்படுவதாகக் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

இலங்கை அணி பங்கேற்கும் அடுத்த போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி ஓமான் அணியுடன் பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05