Header Logo

வணிகம்
2026இல் பள்ளி மாணவர்களின் கல்விக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் Sunshine Foundation for Good

Feb 11, 2026 - 12:05 PM -

0

2026இல் பள்ளி மாணவர்களின் கல்விக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் Sunshine Foundation for Good

சன்ஷைன் ஹோல்டிங்ஸின் நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) பிரிவான Sunshine Foundation for Good (SFG) தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்களை வாங்குவதற்கான பரிசு வவுச்சர்களை நான்காவது முறையாக வழங்குவதன் மூலம் கல்விக்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதனால், குறித்த ஆண்டு இந்தத் திட்டத்தின் மூலம், சன்ஷைன் ஹோல்டிங்ஸின் செயல்பாட்டுப் பிரிவுகள் காணப்படும் களனி, கடவத்தை, இரத்மலானை, முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி பகுதிகளில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர். 

இத்திட்டத்தின் மூலம், பாலர் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆரம்பப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி இரண்டையும் உள்ளடக்கும் வகையில் வவுச்சர் வழங்கப்பட்டது. மாணவர்களின் கல்விப் பணிகளுக்கு உதவுவதற்கும், புதிய கல்வி ஆண்டை நல்ல முறையில் ஆரம்பிப்பதற்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது நிறுவனத்தின் நல்லதை வாழ்க்கையில் கொண்டு வருதல் என்ற தூரநோக்குப் பார்வைக்கும், நாட்டை உருவாக்கும் நிறுவனத்தின் பணிக்கும் இசைவானதாகும். 

இந்தத் திட்டம், கல்வியை மேம்படுத்துவதையும், அத்தியாவசிய கற்றல் வளங்களை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு சமூகங்களுக்கு உதவுவதற்கான சன்ஷைன் பவுண்டேஷன் ஃபார் குட்-ன் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். 

இந்தத் திட்டம், கல்வியை மேம்படுத்துவதையும் அத்தியாவசிய கற்றல் வளங்களை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு சமூகங்களுக்கு உதவுவதற்கான Sunshine Foundation for Good ன் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். 

இது குறித்து கருத்து தெரிவித்த, சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஷியாம் சதாசிவம், எங்கள் அண்டை சமூகங்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆதரவளிப்பது இலங்கையின் எதிர்காலத்திற்கான முதலீடாகும். இந்தத் திட்டத்தின் மூலம், அவர்கள் தடையின்றி கற்றுக்கொள்வதற்கும், நம்பிக்கையுடன் புதிய கல்வியாண்டை ஆரம்பிப்பதற்கும் நாங்கள் உதவுவோம் என்று நம்புகிறோம். இதேவேளை, சிறந்த இலங்கையை உருவாக்குவதற்கான எங்கள் நீண்டகால இலக்கிற்கும் இது பங்களிக்கிறது. என தெரிவித்தார். 

இத்திட்டம் சன்ஷைன் ஹோல்டிங்ஸின் நிறுவன தொடர்பு மற்றும் சமூகப் பொறுப்பு பிரிவால் நிர்வகிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது. யசோதரா ஆரம்பப் பாடசாலை (களனி), திப்பிட்டிகொடை ரோமன் கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலை (களனி), தளுபிட்டிய ஆரம்பப் பாடசாலை (களனி), பௌத்த ஆரம்பப் பாடசாலை (கடவத்தை), கிறிஸ்து தேவ பாடசாலை (இரத்மலான), கொத்தலாவலபுர மத்திய கல்லூரி (ரத்மலான), புனித ஜோன் கல்லூரி (முகத்துவாரம்) மற்றும் தொட்டவத்த மெதடிஸ்ட் கல்லூரி (கொழும்பு, வடக்கு) ஆகிய பாடசாலைகளுக்கு வவுச்சர்கள் வழங்கப்பட்டன. சன்ஷைன் தலைமைக் குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் சிரேஷ்ட நிர்வாகிகள் மற்றும் சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா, ஹெல்த்கார்ட் டிஸ்ட்ரிபியூஷன் (ஹெல்த்கார்ட்), லினா மேனூபேக்ச்சரிங், சன்ஷைன் டீ மற்றும் சன்ஷைன் கன்ஸ்யூமர் லங்கா ஆகிய வணிகத் துறைகளின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர், இந்த திட்டமானது சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான குழுமத்தின் கூட்டு அர்ப்பணிப்பை வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title