விளையாட்டு
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்திய வீரர்!

Feb 11, 2026 - 07:22 PM -

0

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்திய வீரர்!

டி20 உலகக் கிண்ண போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் போட்டியில் அமெரிக்க அணியை வென்ற இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் நமீபியா அணியை எதிர்கொள்கிறது. நாளை (12) இரவு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் போட்டி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி கிடைத்துள்ளது. 

அது, மீண்டும் இந்திய வீரர்களின் உடற்தகுதி பிரச்சினை தான். ஏற்கனவே, இந்த தொடரில் இடம்பெற்றிருந்த வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயம் காரணமாகவும் பாதிக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. 

இந்த நிலையில் தான் இவர்களைத் தொடர்ந்து இந்திய அணியின் சமீபத்திய அதிரடி துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மாவும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அபிஷேக் சர்மா ஒரு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அமெரிக்க போட்டியிலேயே காய்ச்சல் இருந்தும் அவர் துடுப்பாட்டத்தில் மட்டுமே ஈடுப்பட்டார். 

ரியான் டென் டோஷேட் அளித்த பேட்டியில், 

"அபிஷேக் சர்மாவுக்கு வயிற்று பிரச்சினை உள்ளது. இன்னும் இரண்டு தினங்களில் அவர் சரியாகி அணிக்கு திரும்புவார் என நம்புகிறோம்" எனக் கூறியிருக்கிறார். சமீபகாலமாக அதிரடியில் கலக்கி வரும் அபிஷேக் சர்மாவுக்கு உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. 

இந்நிலையில் காயம் காரணமாக அமெரிக்க போட்டியில் பங்கேற்காத நட்சத்திர இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குணமடைந்து மீண்டும் பயிற்சியில் பங்கேற்றிருக்கிறார். கடந்த 10 நாட்களாக பந்துவீசாமல் இருந்த அவர் மீண்டும் திரும்பியிருப்பது இந்திய அணிக்கு புதிய தெம்பை கொடுத்துள்ளது. அவர் இந்தியா - நமீபியா போட்டியில் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், விலா எலும்பு காயத்திலிருந்து மீண்ட வாஷிங்டன் சுந்தர் பிசிசிஐ அனுமதிக்கு பிறகு மீண்டும் இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05