Feb 11, 2026 - 08:48 PM -
0
உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இன்றைய (11) மற்றுமொரு போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் விளையாடி வருகின்றன.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது
இதன்படி முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ரதபோர்ட் 42 பந்துகளில் 76 ஓட்டங்களை அதிரடியாக விளாசி அணிக்கு வலுசேர்த்தார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 197 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

