Feb 11, 2026 - 09:42 PM -
0
தாம் பௌத்த மதத்திற்காக குரல் கொடுப்பதாகவும், புத்த சாசனத்திற்காகவும் மகா சங்கத்தினருக்காகவும் முன்னிற்பது இனவாதம் அல்ல எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தாம் சிங்கள பௌத்தராக இருந்தபோதிலும், ஏனைய கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் மதங்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தேர்தலை நடத்துவதா, அல்லது என்னை சிறையில் அடைத்துவிட்டு தேர்தலுக்குச் செல்வதா என்ற குழப்பத்தில் அரசாங்கம் உள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

