Header Logo
Mogo Academy

விளையாட்டு
டோனி 10 லட்சம் ரூபா செலுத்த வேண்டும் என உத்தரவு!

Feb 12, 2026 - 01:22 PM -

0

டோனி 10 லட்சம் ரூபா செலுத்த வேண்டும் என உத்தரவு!
Mobitel inner

கடந்த 2013 ஆம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில், சென்னை அணி வீரர் மகேந்திரசிங் டோனிக்கும் தொடர்பு இருப்பதாக, ஓய்வுப்பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். 

இது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி, 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி சம்பத் குமாருக்கு எதிராக டோனி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்புடைய சிடி-யை எழுத்து வடிவமாக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, 

வழக்கு தொடர்பான சிடி-யை எழுத்துவடிவமாக்க மொழிபெயர்ப்பாளரும், தட்டச்சரும் முழுநேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. 

இதற்கு 3 முதல் 4 மாதங்களாகும். மொழியாக்கம் செய்யப்படும் ஆவணங்களை நகல் எடுக்க கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. 

இதனால், மொழியாக்கத்துக்கான கட்டணமாக 10 லட்சம் ரூபாயை தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு மார்ச் 12 ஆம் திகதிக்குள் டோனி செலுத்த வேண்டும். 

மேலும், மொழியாக்க பணிகளை மார்ச் 3 ஆவது வாரத்துக்குள் மொழி பெயர்ப்பாளர், தட்டச்சர் முடிக்க வேண்டும். விசாரணையை மார்ச் 12 ஆம் திகதிக்கு தள்ளிவைகிறேன் என்று உத்தரவிட்டார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara