Header Logo

சினிமா
தந்தை போன்று சினிமாவில் கலக்கும் இன்பநிதி!

Feb 12, 2026 - 03:48 PM -

0

தந்தை போன்று சினிமாவில் கலக்கும் இன்பநிதி!

கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார். இந்நிலையில் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்து வெளியாகி வரும் தகவல் ரஜினி, கமல் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது. 

இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இதற்கிடையே ரஜினி - கமல் இணைந்து நடிக்க இருக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் படத்தின் முதன்மை தயாரிப்பாளராக உதயநிதியின் மகனுமான இன்பநிதி மற்றும் ஐஸ்வர்யா ரஜினி, சுருதிஹாசன் ஆகியோர் இணை தயாரிப்பிலும் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

படத்திற்காக சென்னையில் கார் மெக்கானிக் செட் மற்றும் ஓட்டல் என 2 பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ரஜினி தற்போது ஜெயிலர் - 2 டப்பிங் பணிகளில் இருக்கிறார். இந்த பணிகள் முடிவடைந்ததும் மார்ச் மாதத்தில் இருந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினியின் 173 ஆவது படப்பிடிப்பு தொடங்குகிறது. 

இதற்கு முன்னதாக ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தின் புரோமோவில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் 15 நாட்கள் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு முன்னதாக படத்தின் புரோமோ பணிகளை முடிப்பதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title