Feb 12, 2026 - 03:57 PM -
0
City of Dreams Sri Lanka கட்டடத் தொகுதியின் Cinnamon Life வளாகத்தினுள் அமைந்துள்ள The Offices அலுவலக இட வசதிகள் தற்போது முழுமையாக வழங்கப்பட்டுவிட்டமை குறித்து ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அவற்றில் பல தளங்கள் ஏற்கனவே முன்னணி உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தின் முக்கியமான சாதனைமைல்கல்லாக இந்நிகழ்வு மாறியுள்ளது.
அனைத்து வசதிகளையும் ஒருங்கே கொண்டு நகர்ப்புறத்தில் அமைந்துள்ளதுடன், பணி, வாழ்வியல், மற்றும் நகர்ப்புற வாழ்வு ஆகியவற்றை தங்குதடையின்றி ஒன்றுகலக்கச் செய்கின்ற City of Dreams வளாகத்தின் மீதான ஆர்வமும், கேள்வியும் அதிகரித்துச் செல்வதை இது பிரதிபலிக்கின்றது. கொழும்பின் மையத்தில் அமைந்துள்ள இவ்வளாகம், Cinnamon Life மற்றும் NUWA ஹோட்டல், ஏராளமான உயர்ரக வர்த்தகநாமங்களைக் கொண்டுள்ள விசேட சில்லறை வர்த்தகத் தொகுதி ஆகியவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளதுடன், ஒரே இடத்திலேயே வாழ்க்கை-பணி-சமூகச் சூழல் ஆகியவற்றை உண்மையாக ஒருங்கிணைப்பதற்கு இடமளிக்கின்ற அதிசொகுசு குடியிருப்புக்களையும் கொண்டுள்ளது.
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் ஆதனங்கள் துறையின் தலைமை அதிகாரியும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட உப தலைவருமான இனோக பெரேரா அவர்கள் இச்சாதனை குறித்து கருத்து தெரிவிக்கையில்:
“Cinnamon Life வளாகத்தினுள் அமைந்துள்ள The Offices அலுவலக இடவசதிகள் முழுமையாக வழங்கப்பட்டுவிட்டமை மக்களும், வர்த்தக நிறுவனங்களும் எவ்வாறு நகர்ப்புற ஈடுபாட்டைத் தெரிவு செய்கின்றனர் என்பதில் தெளிவான மாற்றம் நிகழ்ந்து வருவதைப் பிரதிபலிக்கின்றது. சௌகரியம், அனைத்தையும் இலகுவாக பெற்றுக்கொள்ளும் வசதி, மற்றும் வாழ்வியல் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் சூழலை இது வழங்குவதுடன், கொழும்பில் இன்னும் சிறப்பாக ஒருங்கிணைந்த வழியில் பணிபுரிவதற்கு இடமளிக்கின்றது.”
புகையிரத நிலையம், பிரதான பேருந்து முனையங்கள், ஒன்றுடொன்று இணைந்த வீதி வலையமைப்புக்கள் உள்ளிட்ட முக்கிய போக்குவரத்து உட்கட்டமைப்பிற்கு நேரடி அணுகல் வசதியைக் கொண்டுள்ளதுடன், மத்திய வர்த்தக மாவட்டம், துறைமுக நகரம், அதிவேக நெடுஞ்சாலைக்கும் செல்லும் வழிகளுடன் தங்குதடையின்றிய போக்குவரத்துக்களை உறுதி செய்கின்றது. இந்த வளாகத்தில் அலுவலக இட வசதிகளைப் பெற்றுக்கொண்ட நிறுவனங்கள் மத்தியில் இதற்கு பலத்த கேள்வி நிலவியமைக்கு அதன் உச்ச கட்ட போக்குவரத்து வசதியும் முக்கிய காரணமாகவுள்ளது.
அலுவலக தொகுதி முழுமையாக வழங்கப்பட்டுவிட்ட சாதனை, நீண்ட கால மற்றும் உயர் தர குடியிருப்பாளர்கள் மற்றும் கவர்ச்சியான வாடகை வருமானங்களின் ஆதரவு என்பன கொழும்பிலுள்ள மிகவும் ஈர்ப்பான Grade-A தர அலுவலகங்களின் முகவரிகளில் ஒன்றாக இந்த வளாகத்தை நிலைநிறுத்தியுள்ளது. தனித்துவமான அமைவிடத்திற்குப் புறம்பாக, அதன் பரந்தளவில் ஒருங்கிணைந்த சூழலானது விருந்தோம்பல், பொழுதுபோக்கு, மற்றும் உட்கடட்டமைப்பு வசதிகளை அதே வளாகத்தினுள்ளேயே உடனடியாக அணுகக்கூடியதாக உள்ளமையால் இங்கு குடியிருக்க வருவோர் நீண்ட காலம் தங்கியிருக்கச் செய்வதை மேம்படுத்துகிறது.
Cinnamon Life உள்ளேயே அலுவலக தொகுதியிலிருந்து ஒரு சில அடி தூரத்தில் The Residences அமைந்துள்ளமை, வாழ்க்கை-பணி சமநிலையை சிறப்பாகப் பேணுவதற்கு இடமளிப்பதால், குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும் இலங்கையில் பணிபுரியும் வெளிநாட்டு அதிகாரிகள் மத்தியில் இவ்வளாகத்தின் மீதான ஆர்வத்தை பெருமளவில் அதிகரிக்கச் செய்துள்ளது. போக்குவரத்திற்கு தேவையான நேரங்களைக் குறைத்து, பணியில் உச்சத்திறனை ஏற்படுத்துவதற்கு இந்த ஒருங்கிணைந்த வசதி இடமளிப்பதுடன், குடியிருக்க வருகின்றவர்கள் நீண்ட காலத்திற்கு தொடர்ந்தும் தங்குவதை ஆதரித்து, பரிணமித்து வரும் கொழும்பின் வர்த்தகத் துறையில் அலுவலங்களை இங்கு கொண்டிருப்பதன் மதிப்பை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
City of Dreams Sri Lanka, The Offices மற்றும் Cinnamon Life தொகுதியிலுள்ள The Residences ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் தற்போது அருகி வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அலுவலக தொகுதி முழுமையாக வழங்கப்பட்டு விட்டமை, கவர்ச்சியான வாடகை வருமானங்களுடன் நீண்ட காலத்திற்கு தங்கியிருக்கும் குடியிருப்பாளர்களின் துணை ஆகியவற்றுடன், இத்தகைய தரம், அளவு, மற்றும் அமைவிடம் கொண்ட Grade-A வர்த்தகச் சொத்தில் முதலீடு செய்யும் வாய்ப்புக் கிடைப்பது மிகவும் அரிதாகும். இந்த சூழ்நிலையில் Cinnamon Life வளாகத்தினுள் அமைந்துள்ள அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புக்கள் மிகவும் அரிதான மற்றும் வேறு எங்கும் கிடைக்காத முதலீட்டு வாய்ப்பாக காணப்படுவதுடன், அளவு, ஒருங்கிணைப்பு, மற்றும் மாற்றுத் தெரிவற்ற அமைவிடம் ஆகியவற்றின் துணையுடன் நிரூபிக்கப்பட்டுள்ள கேள்வி, ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு, மற்றும் நீண்ட கால மதிப்பின் நன்மையைக் கொண்டுள்ளது.
City of Dreams Sri Lanka வளாகத்தில் கிடைக்கும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து மேலும் அறிந்து கொள்வதற்கு www.johnkeellsproperties.com என்ற இணையத்தளத்தை நாடுங்கள் அல்லது 070 2 151 151 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துங்கள்.

