Feb 12, 2026 - 08:23 PM -
0
நச்சுப் போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்திட்டத்தின் கீழ், மாத்தறை மாவட்ட செயல்பாட்டு சபையை நிறுவுவதற்கான விசேட கூட்டம் இன்று (12) நடைபெற்றது.
பொதுப்பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல தலைமையில், மாத்தறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது.
"போதை இல்லாத நாடு - மகிழ்ச்சியான நாளை" என்ற எண்ணக்கருவுக்கு அமைய மாத்தறை மாவட்ட வேலைத்திட்டத்தின் ஊடாகப் பாதுகாப்புத் தரப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் புனர்வாழ்வு ஆகிய துறைகளில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் தற்போதைய முன்னேற்றம் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
அத்துடன், மாவட்ட ரீதியாகக் களப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து பிரதி அமைச்சரின் கவனம் செலுத்தப்பட்டது.
அந்தச் சிக்கல்களுக்கு விரைவாகத் தீர்வுகளைக் கண்டு, இந்தத் தேசிய வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்குமாறு பிரதி அமைச்சர் அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

