செய்திகள்
நபீபியாவுக்கு, இந்தியா நிர்ணயித்த வெற்றியிலக்கு

Feb 12, 2026 - 08:43 PM -

0

நபீபியாவுக்கு, இந்தியா நிர்ணயித்த வெற்றியிலக்கு

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (12) இடம்பெறுகின்றது. 

டெல்லியில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபியா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி, முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் இஷான் கிஷன் 61 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா 52 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர். 

இந்நிலையில் 210 என்ற வெற்றியிலக்கை நோக்கி நபீபியா அணி துடுப்பாடவுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05