Feb 13, 2026 - 02:17 PM -
0
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பளை பகுதியில் 30 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (12) பளை பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்த சோதனையின் போது, இந்த கேரள கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது.
14 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்ட கேரள கஞ்ஞாவின் பெறுமதி 105 இலட்சம் ரூபாவாகும்.
எனினும் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை.
இது தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

