Header Logo
Mogo Academy

விளையாட்டு
நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றிப்பெற்ற அமெரிக்கா!

Feb 13, 2026 - 10:09 PM -

0

நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றிப்பெற்ற அமெரிக்கா!
Mobitel inner

2026 டி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அமெரிக்க அணி 93 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. 

சென்னையில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றது. 

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Saiteja Mukkamalla அதிகபட்சமாக 79 ஓட்டங்களையும், Shubham Ranjane ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

பந்து வீச்சில் நெதர்லாந்து அணி சார்பில் Bas de Leede 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

பின்னர் 197 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 15.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. 

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Bas de Leede அதிகபட்சமாக 23 ஓட்டங்களையும், அணித்தலைவர் Scott Edwards 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

பந்து வீச்சில் அமெரிக்க அணி சார்பில் Harmeet Singh 04 விக்கெட்டுக்களையும் Shadley van Schalkwyk 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara