Feb 14, 2026 - 03:37 PM -
0
மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றைக் கடற்படையினர் கையகப்படுத்தியுள்ளனர்.
அந்தப் படகில் இருந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த டிங்கி படகிலிருந்து போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் படகும் சந்தேகநபர்களும் தற்போது கரைக்கு அழைத்து வரப்படுவதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

