செய்திகள்
மேற்கிந்திய தீவுகள் அணி இலகு வெற்றி

Feb 15, 2026 - 02:07 PM -

0

மேற்கிந்திய தீவுகள் அணி இலகு வெற்றி

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்று (15) இடம்பெற்ற நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இன்று முற்பகல் 11 மணிக்கு மும்பையில் ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய நேபாளம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

நேபாளம் அணி சார்பில் திபெந்திர சிங் ஐரி அதிகபட்சமாக 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 

இந்நிலையில் 134 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 15.2 ஓவர்களில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05