Header Logo
Mogo Academy

விளையாட்டு
நேபாளத்தை வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது மேற்கிந்திய தீவுகள்

Feb 15, 2026 - 04:28 PM -

0

நேபாளத்தை வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது மேற்கிந்திய தீவுகள்
Mobitel inner

2026 இருபதுக்கு 20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 'C' குழுவிலிருந்து சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கு மேற்கிந்திய தீவுகள் அணி இன்று (15) தகுதி பெற்றுள்ளது. 

மும்பையில் நடைபெற்ற போட்டியில் நேபாள அணியை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தியதன் மூலம் இந்த தகுதியை அந்த அணி பெற்றுள்ளது. 

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது. 

இதற்குப் பதிலளித்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 15.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. 

இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. 

அதேவேளை, தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்த நேபாள அணி உலகக்கிண்ணத் தொடரிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara