Header Logo

விளையாட்டு
மைதானத்தில் மோதி கொண்ட இந்திய வீரர்கள்!

Feb 16, 2026 - 01:55 PM -

0

மைதானத்தில் மோதி கொண்ட இந்திய வீரர்கள்!

டி20 உலகக் கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா முன்னேறியது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் உடன் மோதும் வீதமாக நடந்து கொண்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இஷான் கிஷானின் அதிரடியான துடுப்பாட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. 

பாகிஸ்தான் இறுதியாக 18 ஓவர்கள் முடிவில் 114 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. இந்திய அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 40 பந்துகளில் 77 ஓட்டங்களை விளாசிய இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷான் ஆட்டநாயகன் பட்டத்தை விருதை பெற்றார். 

இதனிடையே பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு, இந்திய வீரர்கள் கைகுலுக்கியபோது, ​​அணி தலைவர் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் குல்தீப் யாதவிடம் தவறாக நடந்து கொண்டனர். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

பாகிஸ்தான் அணியின் 18 ஆவது ஓவரில் குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா இடையே மோதல் ஏற்பட்டது. ஹர்திக் ஷாஹீன் அப்ரிடிக்கு பந்து வீசிக் கொண்டிருந்தபோது, ​​அந்த ஓவரின் இரண்டாவது பந்து குல்தீப் யாதவுக்கு சென்றது, ஆனால் அவர் அதைப் பிடிக்கத் தவறிவிட்டார். அவர் ஒரு எளிய கேட்சை விட்டார், பந்து அவரைத் தாண்டி சிக்ஸராக பறந்தது. இது ஹார்திக்கை கோபப்படுத்தியது. 

இதையடுத்து போட்டிக்குப் பிறகு, இந்திய வீரர்கள் கைகுலுக்கிக்கொண்டிருந்தபோது, ​​சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா குல்தீப் யாதவிடம் தவறாக நடந்து கொண்டனர். நிலைமை மோசமடைவதைக் கண்ட ரிங்கு சிங் தலையிட்டார். குல்தீப் யாதவும் எந்த உற்சாகமும் இல்லாமல் சோகமாக இருப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.


MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title