Header Logo
Mogo Academy

விளையாட்டு
புதிய சாதனை படைத்து அசத்திய இந்திய அணி!

Feb 16, 2026 - 04:16 PM -

0

புதிய சாதனை படைத்து அசத்திய இந்திய அணி!
Mobitel inner

டி20 உலகக் கிண்ண தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தியது. உலகக் கிண்ண தொடரில் இந்தியா தொடர்ச்சியாக 11 ஆவது வெற்றியை பெற்றது. 9 ஆவது வெற்றியை அடைந்த போது இந்தியா புதிய சாதனை படைத்து இருந்தது. 

இதற்கிடையே பாகிஸ்தானை தோற்கடித்தன் மூலம் இந்தியா புதிய சாதனையை நிகழ்த்தியது. ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) நடத்திய போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக 16 ஆவது வெற்றியை பெற்றது. 

2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி அவுஸ்திரேலியாவிடம் தோற்றது. அதன் பிறகு ஐ.சி.சி. நடத்திய உலகக் கிண்ணம், சாம்பியன்ஷிப் டிராபி (டி20, ஒருநாள்) போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. 

இதற்கு முன்பு அவுஸ்திரேலியா 2006 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஐ.சி.சி. போட்டிகளில் தொடர்ச்சியாக 15 வெற்றியை பெற்று இருந்தது. இந்த சாதனையை இந்தியா தற்போது முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது. 

இந்திய அணி இதற்கு முன்பு 2012 - 2014 வரை தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது. டி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 8 - 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara