Header Logo

சினிமா
திரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட பாஜக தலைவர்!

Feb 16, 2026 - 07:07 PM -

0

திரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட பாஜக தலைவர்!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருப்பவர் நயினார் நாகேந்திரன். முன்னணி நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய்யை நயினார் விமர்சித்து பேசும்போது "அவர் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், த்ரிஷாவை விட்டுவிட்டு வர வேண்டும்" என பேசினார். 

விஜய் - த்ரிஷா இருவரையும் இணைத்து அவர் பேசியது சர்ச்சையாக வெடித்த நிலையில் பிரபலங்கள் பலரும் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்தனர். 

த்ரிஷாவும் கடும் கோபமாக தனது வக்கீல் மூலமாக அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்தார். 

இந்நிலையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்டிருக்கிறார். வாய் தவறி அப்படி பேசிவிட்டதாக குறிப்பிட்டு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைமை மற்றும் அண்ணாமலை ஆகியோர் இது பற்றி தன்னிடம் பேசியதாக குறிப்பிட்ட அவர்.. 

"நான் தனிநபர் விமர்சனம் செய்தது இல்லை. அன்றைக்கு அது தவறி வந்த ஒரு வார்த்தை. என்னுடைய வருத்தத்தை நான் மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறி இருக்கிறார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title