Header Logo

வணிகம்
INSEE சீமெந்து, வணிகப் பங்காளர் விருதுகள் 2026இல் சிறந்த சாதனைகளை கொண்டாடியது

Feb 16, 2026 - 07:19 PM -

0

INSEE சீமெந்து, வணிகப் பங்காளர் விருதுகள் 2026இல் சிறந்த சாதனைகளை கொண்டாடியது

இலங்கையின் நம்பர் 1 சீமெந்து உற்பத்தியாளரும் வழங்குநருமான INSEE சீமெந்து, அண்மையில் கொழும்பில் உள்ள ITC ரத்னதீபவில் கோலாகலமாக நடைபெற்ற அதன் வருடாந்த INSEE வணிகப் பங்காளர் விருதுகள் 2026இல் சிறந்த வணிகப் பங்காளர்களை பெருமையுடன் கௌரவித்தது. 

இந்த ஆண்டின் கருப்பொருளான “අනාගත ආධිපත්‍යය” (எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்துதல்), INSEE சீமெந்தின் தொலைநோக்கு சிந்தனையையும் பங்குதாரர்களுடன் நிறுவனம் பகிர்ந்து கொள்ளும் கூட்டாண்மைகளின் வலிமையையும் பிரதிபலிக்கிறது. கருப்பொருளையும் தாண்டி இது, துணிச்சலுடன் வழிநடத்துவதற்கும் உறுதியுடன் இருப்பதற்கும் சவால்கள் மத்தியிலும் நம்பிக்கையுடன் முன்னேறுவதற்குமான நிறுவனத்தின் தெளிவான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. தொடர் புத்தாக்கம், நெகிழ்வுத் தன்மை மற்றும் சந்தைத் தலைமைத்துவம் ஆகியவற்றுடன் INSEE சீமெந்து, அதன் பங்காளர்களுடன் இணைந்து, இலங்கையின் கட்டுமான மற்றும் கட்டிடத் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் வலிமை, விசேடத்துவம் மற்றும் நீடித்த தலைமைத்துவத்தால் வரையறுக்கப்பட்ட புதிய அளவுகோல்களை அமைக்க உறுதி பூண்டுள்ளது. 

இந் நிகழ்வில் INSEE சீமெந்தின் சில்லறை வணிக பங்காளர்களின் தன்னிகரற்ற பங்களிப்புகள் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டன. அவர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு, நிறுவனத்தின் நிலையான வளர்ச்சிக்கும் சந்தை தலைமைத்துவத்திற்கும் முக்கிய பங்களிக்கின்றது. மேலும் இந் நிகழ்வில் நாடு முழுவதும் உள்ள நிறுவனத்தின் சில்லறை விற்பனை பங்காளர்களின் சிறப்பான செயல்திறனும் சாதனைகளும் அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன. நிறுவனத்தின் முன்னணி வர்த்தக நாமங்களான சங்ஸ்தா மற்றும் Mahaweli Marine Plus ஆகியவற்றின் சிறப்பான பங்களிப்பு முன்னிறுத்தப்பட்டமை இந் நிகழ்விற்கு மேலும் சிறப்பு சேர்த்தது. இவ்விருதுகள், அவற்றின் அபாரமான செயல்திறன் மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டன. இது சில்லறை விற்பனை துறையில் வெற்றியை முன்னெடுப்பதில் இவ் வர்த்தக நாமங்கள் வகிக்கும் முக்கிய பங்கையும் வலியுறுத்தியது. 

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்டின் INSEE வணிகப் பங்காளருக்கான விருது, Lahiru Enterprises/R.W. Holding - கொட்டாவ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இது சிறந்த செயல்திறன் மற்றும் விசேடத்துவதிற்கான அவர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரித்து வழங்கப்பட்டது. இதன் மூலம் INSEE பங்காளர்களுக்கு கிடைக்கும் வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் போட்டியில் முன்னிலை வகிப்பதற்கான தனித்தன்மை ஆகியவை தெளிவாக புலப்படுகின்றன. சிறப்பு தேசிய பிரிவுகளில், அம்பாறையை சேர்ந்த Jasra Hardware, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் மிக உயர்ந்த வளர்ச்சியை அடைந்ததற்காக அங்கீகரிக்கப்பட்டதுடன் பிலிமத்தலாவையை சேர்ந்த New Central Hardware மிக உயர்ந்த தொகுதி (Volume) சாதனையாளர் விருதைப் பெற்றது. இவ் வெற்றிக் கதைகள் INSEEஇன் வணிகப் பங்காளர் வலையமைப்பிற்குள் காணப்படும் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைப் பிரதிபலிக்கின்றன. இவ் விருது வழங்கும் விழா பரஸ்பர வளர்ச்சி மற்றும் வெற்றியை நோக்காகக் கொண்ட வலுவான கூட்டாண்மைகளை உருவாக்குவதில் INSEEஇன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது. மேலும், முழுமையான ஆதரவு அமைப்புகளும் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகளும் இதற்கு உந்துதலாக அமைகின்றன. 

INSEE லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி Eng. துசித் C. குணவர்ணசூரிய கூறுகையில், “INSEE சீமெந்தின் வெற்றிக்கு எங்கள் வணிக பங்காளர்களே முக்கிய காரணம் ஆகும். INSEE வணிகப் பங்காளர் விருதுகள் சிறந்த செயல்திறனை மட்டுமல்லாமல், எங்கள் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் சந்தைத் தலைமைத்துவத்திற்கும் ஆதரவு அளிக்கும் ஒத்துழைப்பின் வலிமையையும் பகிரப்பட்ட இலட்சியத்தையும் கொண்டாடுகின்றன. இலங்கையின் எதிர்கால கட்டுமானத் துறையில் ​​புதுமைகளை புகுத்துவதற்கும், சவால்களை எதிர்கொள்வதற்கும், புதிய அளவுகோல்களை உருவாக்குவதற்கும் நாங்கள் ஒன்றாக உறுதிபூண்டுள்ளோம். என்றார். 

INSEE சீமெந்து, அதன் முன்னணி வர்த்தக நாமங்களான INSEE சங்ஸ்தா மற்றும் INSEE Mahaweli Marine Plus சீமெந்து உட்பட, பரந்த சீமெந்து மற்றும் கட்டுமானப் பொருட்களின் தொகுப்புடன் தொழில்துறையில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. நிறுவனத்தின் வலுவான தொழில்முறை குழு, உள்ளூர் கட்டுமானத் துறையை அதிக செயல்திறன் கொண்டதாகவும் குறைந்த கார்பன் தடம் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள கட்டுமானங்களை நோக்கி வழிநடத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. அதே வேளை அதன் பங்காளர்களுக்கு சந்தையில் நிலையான வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் போட்டியில் முன்னேறுவதற்கான உதவிகளையும் வழங்குகிறது.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title