Feb 16, 2026 - 07:29 PM -
0
இந்து சமுத்திரப்பகுதியில் முன்னணி தனியார் விருந்தோம்பல் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் Sun Siyam குழுமமானது தனது நிர்வாக வளர்ச்சியில் ஒரு முக்கிய கட்டமாக, தீபக் பூனாடியை (Deepak Booneady) புதியகுழும பிரதம நிறைவேற்றதிகாரியாக பதவியுயர்வு செய்துள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளது. இந்த நியமனத்தின் மூலம் , குழுமத்தின் நீண்டகால வளர்ச்சி இலக்கு , வர்த்தகநாமத்தின் பெறுமதியை உயர்த்தும் முயற்சிகளை மேற்கொள்வதுடன் மற்றும் அர்த்தமுள்ள தலைமையைக் கொண்ட நிர்வாக அணுகுமுறையை மேலும் உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
இதற்கு முன் Sun Siyam Resorts நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயல்பட்ட தீபக், குழுமத்தின் மாற்றப் பயணத்தில் முக்கிய பங்காற்றியவர் ஆவார் . அவரது தலைமையில், வர்த்தக நாம அடையாளம் வலுப்பெற்றதுடன் விருந்தினர் அனுபவத்தினை தரம் உயர்த்தல், மற்றும் நாட்டின் சூழலை பிரதிபலிக்கும் பாரம்பரிய பெறுமதியினை பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் , உலகளாவிய சந்தையில் எதிர்காலத்திற்கேற்ற வகையில் நிறுவனத்தை முன்னேற்றும் பல முக்கிய மூலோபாய முயற்சிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.
அவரது தலைமையின் கீழ், Sun Siyam நிறுவனம் மாலைத்தீவு மற்றும் இலங்கையில் தனது ஹோட்டல் வர்த்தகப் பிரிவுகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி, மேம்படுத்தி வருகிறது. அதே நேரத்தில், முக்கிய உலகளாவிய சந்தைகளில் அதன் சர்வதேசத் தெரிவுநிலை மற்றும் தேவையையும் உயர்த்தியுள்ளதுஅவரது தலைமைத்துவ அணுகுமுறையின் முக்கிய அம்சம், மக்கள், கலாசாரம் மற்றும் திறமை மேம்பாட்டிற்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பு ஆகும். நீண்ட கால வர்த்தகநாம வளர்ச்சிக்கு, மிகச் சிறப்பாகச் செயல்படும் குழுக்களை உருவாக்குவதையும், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் அவர் வலுவாக வலியுறுத்துகிறார். Sun Siyam குழும பிரதம நிறைவேற்றதிகாரியாக தீபக் பூனடி பொறுப்பேற்ற நிலையில் அவர் , குழுமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி, வர்த்தகநாம அபிவிருத்தி மற்றும் புதிய சந்தை விரிவாக்கங்களை நிர்வகிப்பார். உண்மைத்தன்மை , நேர்மை மற்றும் அன்பான விருந்தோம்பல் ஆகிய நிறுவனத்தின் முக்கிய விழுமியங்களைப் பாதுகாத்து, குழுமத்தின் வணிகங்களை உத்தியோகபூர்வமாக வழிநடத்தவுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பாக Sun Siyam குழுமத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவப்பணிப்பாளரான அகமத் சியாம் முகமத் கருத்துத் தெரிவிக்கையில், :
Sun Siyam குழுமம் என்பது மனிதர்களின் மதிப்பு, தெளிவான நோக்கம் மற்றும் அன்பும் அக்கறையும் நிறைந்த விருந்தோம்பல் ஆகியவற்றின் மீது கட்டியெழுப்பப்பட்ட அமைப்பாகும். அந்த பயணத்தில் தீபக் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளார்; நாங்கள் ஒன்றாக எட்டிய பல முக்கிய முன்னேற்றங்களில் அவரதுதலைமைத்துவம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தெளிவான மூலோபாய சிந்தனை, நேர்மை மற்றும் எமது ஊழியர்கள் பண்பாட்டின் மீது கொண்ட ஆழ்ந்த மரியாதையுடன் செயல்பட்டு, எமது நாடு முழுவதிலும் உள்ள அணிகளை சிறப்பாக செயல்பட ஊக்குவித்து, அனைவரும் பகிர்ந்து கொள்ளும் வெற்றிக்கு வழி வகுத்துள்ளார்.இந்த நியமனம், வலுவான ஒத்துழைப்பு தலைமுறையை தொடர்ந்து முன்னிலைப்படுத்தும்எமது அணுகுமுறையையும், அவர்மீது நான் வைத்துள்ள முழு நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. இந்த புதிய பொறுப்பில் அவரின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை பார்ப்பதற்கு நான் ஆர்வமுடன் உள்ளேன் மேலும், Sun Siyam குழுமம் ஒருங்கிணைந்து எதிர்காலத்தில் அடையவிருக்கும் சாதனைகளை ஆவலுடன் எதிர்நோக்க தயாராகவுள்ளேன்.
மாலைதீவின் மிகவும் மதிப்பிற்குரிய மற்றும் முன்னேற்ற நோக்குள்ள வர்த்தத் தலைவரான அகமத் சியாம் முஹம்மத் அவர்கள் நிறுவிய Sun Siyam குழுமம் மூன்று தசாப்தங்களுக்கு மேல் நேரடியாக செயற்பட்ட தலைமையின் கீழ் நாட்டின் சுற்றுலா துறைக்கு உறுதியான அர்ப்பணிப்பில் உருவானது. ஆரம்ப காலத்திலிருந்து, இந்த குழுமம் திறமையான செயல்பாட்டு நிபுணத்துவம், விருந்தினர்கள் அனுபவத்தை உணர்வுப்பூர்வமாக புரிந்துகொள்வது, மற்றும் மாலைதீவின் திறமையில் நிலையான நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகியுள்ளது. இன்று, Sun Siyam குழுமம் நாட்டின் முன்னணி சுற்றுலா பங்களிப்பாளர்களில் மற்றும் வேலைவாய்ப்பாளர்களில் ஒன்றாக திகழ்கிறது, மேலும் அதன் பல்துறைச் செயல்பாடுகள் விருந்தோம்பல், பயண சேவைகள், கட்டுமானம், ஊடகம், மற்றும் நிலைத்துறையோடு தொடர்புடைய முயற்சிகளை கொண்டுள்ளது.
மாலைதீவு மற்றும் இலங்கை முழுவதும் செயல்பட்டு வரும் Sun Siyam குழுமம், ஐரோப்பா, ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய உலகளாவிய விற்பனை மற்றும் பிரதிநிதித்துவ அலுவலகங்களை கொண்டு திகழ்கிறது.மேலும் லைஃப்ஸ்டைல் என்ற தனித்துவமான குடியிருப்பு தொகுப்புகளில் உள்ள பல்வேறு ரிசோர்ட்களை சொந்தமாக நடத்துகிறது. ஒன்றுபட்ட நோக்குடன் செயல்படும் குழுமம், மாலைதீவின் மரபு, உண்மைத்தன்மை மற்றும் சமூக உறவுகளில் வேரூன்றி, அற்புதமான அனுபவங்களை வழங்கும் பணியில் தொடர்கிறது.
தீபக் அவர்களின் நியமனம் ஒரு முக்கிய கட்டத்தில் ஏற்பட்டுள்ளது; இதுSun Siyam குழுமம் தனது வர்த்தகநாமங்களை மேலும் உயர்தரமாக்கும், அடுத்த தலைமுறை ரிசோர்ட் முன்மாதிரிகளில் முதலீடு செய்யும், புதிய நிலைத்துறையுடனான மற்றும் பொறுப்புடன் வளர்ச்சி வாய்ப்புகளை ஆராய்ந்து வரும் நிலையில் இது நிகழ்ந்துள்ளது.
