Feb 16, 2026 - 07:36 PM -
0
‘டித்வா’ புயலைத் தொடர்ந்து மண்சரிவுகள் மற்றும் இடிபாடுகள் காரணமாக பாரதூரமாக தடைப்பட்டிருந்த முக்கியமான போக்குவரத்துப் பாதையை சீர்செய்யும் முகமாக, A5 நெடுஞ்சாலையை அவசரமாக சுத்தம் செய்யும் பணிகளை இலங்கை இராணுவம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, உள்ளூர் அதிகார சபைகள், மற்றும் சூழவுள்ள சமூகங்களுடன் இணைந்து China Harbour Engineering Company Ltd South Asia & Southeast Asia அண்மையில் மேற்கொண்டது. டிசம்பர் 04 முதல் டிசம்பர் 10 வரை தொடர்ந்து ஏழு நாட்களாக இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
புயலால் ஏற்பட்ட கடும் சேதம் காரணமாக சமூகங்களின் போக்குவரத்து, அவசர சேவைகள் வசதி மற்றும் அவசர பொருட்கள் விநியோகத்திற்கான போக்குவரத்து ஆகியவற்றை பல்வேறு பிராந்தியங்கள் மத்தியில் மேற்கொள்வதற்கு மிக முக்கியமான மார்க்கமாகக் காணப்பட்ட A5 நெடுஞ்சாலையை கடந்து செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது. உரிய அதிகாரிகள் விடுத்த அவசர கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, வீதிகளில் ஏற்பட்ட தடைகளை அப்புறப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்தி, நாட்டின் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக தமது விசேட மீட்பு அணிகள், கனரக இயந்திரங்கள், மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றை வழங்குவதற்காக China Harbour South Asia & Southeast Asia நிறுவனம் உடனடியாக முன்வந்தது. 1998 ம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கி வரும் China Harbour நிறுவனம், நாட்டுடன் 27 ஆண்டு கால கூட்டாண்மையை எட்டியுள்ளது. அவசர நிலைமைகளின் போது இலங்கைக்கு ஆதரவளிக்கும் தனது நீண்ட கால அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் சுனாமி, குண்டுத் தாக்குதல், மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் போன்ற பாரிய தேசிய அனர்த்தங்களின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
மீட்பு ஆளணி, நிலத்தை அகற்றித் துப்புரவாக்கும் 24 இயந்திரங்கள், மற்றும் பயிற்றுவிக்கப்பட்ட 36 பணியாளர்களுடன், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நேரடி செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. உறுதியற்ற நிலப்பிரதேசம் மற்றும் சவால்மிக்க காலநிலை நிலைமைகளுக்கு மத்தியில் உழைத்து, பொதுமக்களின் பாவனைக்கான இந்த நெடுஞ்சாலையை பாதுகாப்பாக மீண்டும் திறப்பதற்காக அதிகாரிகளுக்கு உதவும் வகையில் வீதிகளில் காணப்பட்ட மண், வீழ்ந்த மரங்கள், பாறைகள், மற்றும் சேதமடைந்த கட்டமைப்புக்களை அகற்றும் பணியில் இந்த அணி ஈடுபட்டது.
‘டித்வா’ புயலைத் தொடர்ந்து, இந்நிறுவனம் மேற்கொண்டுள்ள பரந்த நிவாரண முயற்சிகளில் முக்கிய பாகமாக A5 நெடுஞ்சாலையின் புனரமைப்பு நடவடிக்கை காணப்படுகின்றது. உடனடி மீட்புப் பணிகள், அவசர பொருட்களின் விநியோகம், மற்றும் இலங்கையிலுள்ள சீன வர்த்தக சம்மேளனத்தினூடான நிதி உதவி ஆகியன இம்முயற்சிகளில் அடங்கியுள்ளதுடன், தேசிய தேவைப்பாடுகள் எழுகின்ற காலகட்டங்களில் நாட்டுக்கு உதவுவதில் China Harbour South Asia & Southeast Asia நிறுவனத்தின் அர்ப்பணிப்பினை இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
China Harbour South Asia & Southeast Asia நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் சூ லிகியாங் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த காலங்களில் இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ‘டித்வா’ புயல் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இத்தேசத்தின் நீண்ட கால பங்காளர் என்ற வகையில், இதற்கு விரைவாகவும், செயல்திறன்மிக்க வழியிலும் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு எமக்கு இருப்பதை நாம் உணர்ந்தோம். போக்குவரத்தை மீண்டும் ஆரம்பித்து, நிவாரணப் பணிகளுக்கு உதவி, சமூகங்கள் மீண்டும் இயல்பு வாழ்வு நிலைக்கு திரும்புவதற்கு உதவுவதற்கு மிகவும் முக்கியமான ஒரு சாதனையாக A5 வீதியை மீளவும் திறந்து வைத்துள்ளமை காணப்படுகின்றது. மிகவும் சிரமமான சூழ்நிலைகளின் மத்தியில் அயராது உழைத்து அனைத்து அணிகளுக்கும் எமது ஆழ்ந்த நன்றிகளை தெரிவிப்பதுடன், இதிலிருந்து மீளும் இலங்கையின் எதிர்காலப் பயணத்திற்கு தொடர்ந்தும் எமது உதவிகளை வழங்குவதற்காக நாம் அர்ப்பணிப்புடன் ஒன்றிணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.”
மேலும் அவர் தெரிவிக்கையில் மிகவும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ள இயற்கை அனர்த்தத்திலிருந்து மீளக் கட்டியெழுப்பும் சிக்கலான செயற்பாட்டில் நாடு கால்பதித்துள்ள நிலையில், தொழில்நுட்ப உதவி, இயந்திரங்கள், மற்றும் ஆளணியுடன் அரச முகவர் நிறுவனங்கள், உள்ளூர் அதிகாரசபைகள், மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு China Harbour South Asia & Southeast Asia நிறுவனம் தொடர்ந்தும் உதவும் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
