வணிகம்
Global Consumer Products Pvt Ltd நிறுவனம் ISO 9001:2015 சான்றிதழைப் பெற்றுள்ளது

Feb 17, 2026 - 03:59 PM -

0

Global Consumer Products Pvt Ltd நிறுவனம் ISO 9001:2015 சான்றிதழைப் பெற்றுள்ளது

ஒரு தடவை பயன்படுத்தி அப்புறப்படுத்தக்கூடிய தூய்மை தயாரிப்புகளின் முன்னணி உற்பத்தியாளரான Global Consumer Products (Pvt) Ltd. (GCP), தரத்திற்கான தனது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்யும் வகையில், இலங்கை தரக்கட்டளைகள் நிறுவகத்திடமிருந்து (SLSI) ISO 9001:2015 சான்றிதழைப் பெற்றுள்ளது. 

Soft tissues, Oxo-biodegradable, LDPE மற்றும் HDPE குப்பைப் பைகள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதுடன், அவற்றுக்காக இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் (SLSI) தரச்சான்றிதழைப் (ISO 9001:2015 QMS) பெற்ற இலங்கையின் ஒரேயொரு உற்பத்தியாளர் என்ற தனித்துவமான சிறப்பை GCP கொண்டுள்ளது. நான்கு தசாப்தங்களுக்கும் மேலான சிறப்புமிக்க வரலாற்றையும், தரக்கட்டுப்பாடுகளுக்கு இணங்கி நடக்கும் பண்பையும் கொண்ட இந்நிறுவனம், துறையில் ஒரு பொன்னான காலத்திற்குரிய நியமத்தை நிறுவியுள்ளது. 

தயாரிப்புகளின் தரம் மற்றும் இணக்கப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு soft paper தொகுதிகளும் சந்தைக்கு விடுவிக்கப்படுவதற்கு முன்னர் Bureau Veritas நிறுவனத்தினால் சான்றளிக்கப்படுகின்றன. இதன் மூலம் pH பெறுமதி, கரையும் தன்மை மற்றும் ஏனைய தரக் காரணிகள் சரிபார்க்கப்படுகின்றன. அத்துடன், GCP நிறுவனத்தின் FLEXEE cling film வகை மற்றும் GUARDIAN Aluminium Foil ஆகியவற்றுக்கு கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் (ITI) மூலம் சான்றளிக்கப்பட்டதுடன், புகழ்பெற்ற KOSHER சான்றிதழையும் பெற்றுள்ளன. இது சர்வதேச தர அளவுகோல்களுக்கான இந்நிறுவனத்தின் தளராத அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. 

இது குறித்து GCP நிறுவனத்தின் தொழிற்சாலைத் தலைமை அதிகாரி மொஹைதீன் சாஜித் கருத்துத் தெரிவிக்கையில்: 

எமது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் அவர்களின் திருப்தியை மேம்படுத்தும் உயர்தர தயாரிப்புகளை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை இந்த ISO 9001:2015 சான்றிதழ் அங்கீகரிக்கிறது. எமது நீண்டகால நற்பெயரானது, செயன்முறை முகாமைத்துவம், வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்துதல் மற்றும் கடுமையான உள்வாரி கட்டுப்பாடுகள் ஆகியவற்றில் நாம் கொண்டுள்ள நிலையான கவனத்தைப் பிரதிபலிக்கிறது. இவை அனைத்தும் உயர்தர தயாரிப்புகளை உறுதிப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. தர உத்தரவாதத்தில் நாம் அடைந்துள்ள இந்த வெற்றிகள், எமது நிறுவனம் முழுவதும் நாம் கடைப்பிடித்து வரும் இடைவிடாத சிறந்து விளங்கும் முயற்சியின் நேரடி வெளிப்பாடாகும். தரத்தைப் பேணுவது என்பது எமக்கு வெறும் விருப்பத் தெரிவு மட்டுமல்ல; அது எமது நிறுவன கலாசாரத்துடன் ஆழமாக இணைந்துள்ளது. என்றார். 

முகாமைத்துவ பணிப்பாளர் ஐ.எல். தாவூத் கருத்துத் தெரிவிக்கையில், “எமது சிறந்த கலாசாரம் மற்றும் புத்தாக்கத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம், தயாரிப்புகளில் மட்டுமன்றி எமது வணிக அணுகுமுறையிலும் உயர்தரமான தரநிலைகளை நாம் பேணி வருகின்றோம். எதிர்காலத்தை நோக்குகையில், தரத்திற்கான எமது அர்ப்பணிப்பு என்றும் உறுதியாக இருக்கும். வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், எமது தயாரிப்பு வரிசையை நாம் தொடர்ந்து விரிவுபடுத்துவோம். எமது உலகளாவிய ரீதியிலான சென்றடைவு மென்மேலும் விரிவடைவதுடன், எமது மூலோபாயக் பங்காண்மைகளும் முன்னரை விட பலமடையும். என அவர் மேலும் தெரிவித்தார். 

GCP நிறுவனம் ஒரு பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமாகும். இது FINEX, ECO SACK, GUARDIAN மற்றும் FLEXEE போன்ற முன்னணி வர்த்தக நாமங்களின் கீழ் புதுமையான, சுகாதாரமான மற்றும் சுற்றாடல் நட்பு தயாரிப்புகளை உற்பத்தி செய்தல், சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் வர்த்தக மற்றும் உள்நாட்டு சந்தைகள் ஆகிய இரண்டிற்கும் சேவைகளை வழங்குவதுடன், வாடிக்கையாளர்களின் விசேட தேவைகளுக்கேற்ப தயாரிக்கும் ஒப்பந்த உற்பத்தியாளராகவும் இயங்கி வருகின்றது. 

150 இற்கும் மேற்பட்ட அர்ப்பணிப்புடன் கூடிய ஊழியர் அணியையும், 1,000 இற்கும் அதிகமான வாடிக்கையாளர் தளத்தையும் கொண்டுள்ள GCP நிறுவனம், கூட்டாண்மை, சில்லறை விற்பனை மற்றும் வீட்டுத்தேவை ஆகிய துறைகளில் பல்வேறுபட்ட வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றி வருகின்றது. தனது வலுவான கைத்தொழில் மற்றும் வணிக ரீதியிலான பிரசன்னத்துடன், தரம் மற்றும் புத்தாக்கத்தை அடித்தளமாகக் கொண்டு, வெற்றியின் ஒரு மைல்கல்லாக GCP தொடர்ந்து திகழ்கின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05