Header Logo

வணிகம்
செலான் வங்கி, சுஜாதா பாலிகா வித்தியாலயத்தில் தனது 290ஆவது ‘பஹசர’ நூலகத்தை திறந்து வைத்து மாணவர்களிடையே நிதியறிவை ஊக்குவி

Feb 17, 2026 - 04:02 PM -

0

செலான் வங்கி, சுஜாதா பாலிகா வித்தியாலயத்தில் தனது 290ஆவது ‘பஹசர’ நூலகத்தை திறந்து வைத்து மாணவர்களிடையே நிதியறிவை ஊக்குவி

செலான் வங்கி பிஎல்சி, அதன் 290ஆவது ‘பஹசர’ நூலகத்தை சுஜாதா பாலிகா வித்தியாலயத்தில் திறந்து வைத்ததன் மூலம் அதன் முதன்மையான சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) முயற்சியில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. இவ் விழா 2026 பெப்ரவரி 11, அன்று செலான் வங்கியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரமேஷ் ஜயசேகர, கொழும்பு வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சிந்தா பெரேரா மற்றும் சுஜாதா பாலிகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் O. K. D. M. லக்சாந்தி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. 

மாணவர்களை மையப்படுத்தி செலான் வங்கி மற்றும் பாடசாலை இணைந்து நடாத்திய தொடர்ச்சியான நடவடிக்கைகளை உள்ளடக்கிய 'பஹசர வாரத்தின்' நிறைவைத் தொடர்ந்து புதிதாக புதுப்பிக்கப்பட்ட நூலகம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக கற்றல் மற்றும் டிஜிட்டல் அணுகலை ஆதரிக்கும் வகையில் வங்கி, மடிக்கணினி மற்றும் திறன் பலகை (Smart Board) உட்பட புத்தகங்களை நன்கொடையாக வழங்கியது. 

'பஹசர வாரம்' ஆனது ஆரம்பப் பிரிவு மற்றும் சிரேஷ்ட பிரிவு மாணவர்களுக்கான கணித முகாமையும் புகழ்பெற்ற சமையல் வல்லுநர்கள் அடங்கிய குழுவினால் மதிப்பீடு செய்யப்பட்ட ‘Cooking Day’ஐயும் உள்ளடக்கியிருந்தது. மேலும், சிறு வயதிலிருந்தே சிறுவர்களுக்கு சேமிப்புப் பழக்கம் மற்றும் அடிப்படை பண நிர்வாகத்தை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நிதியறிவுத் திட்டமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாடசாலைப் பருவத்தில் பொறுப்பு மற்றும் நிர்வாகத் திறன்களை வளர்க்க உதவும் வகையில் நூலகத்தைப் பராமரிப்பதிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை உதவிப் பொது முகாமையாளர் ஆசிரி அபயரத்ன, “நாடெங்கிலும் 300 ‘பஹசர’ நூலகங்களை நிறுவுவதற்கான உறுதிப்பாட்டை நோக்கி வங்கி சீராக முன்னேறி வரும் நிலையில் 290ஆவது நூலகத்தின் திறப்பு விழாவானது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். நூலக மறுசீரமைப்புக்கு நிதியளிப்பதிலும், மாணவர்களின் அறிவு மற்றும் திறன்களை வளர்ப்பதற்கு தேவையான கல்வி வளங்களை வழங்குவதிலும் செலான் வங்கி தொடர்ந்து உறுதியாக உள்ளது.” என்றார். இந் நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்கு கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கினர். அதிலும் குறிப்பாக மாணவர்கள் 'பஹசர வார' நடவடிக்கைகள் அனைத்திலும் உற்சாகத்துடன் பங்கேற்றனர். 

எதிர்கால சந்ததியினரை மேம்படுத்துவதில் கல்வியை மையமாகக் கொண்டு 2013 மார்ச் 1, அன்று ஆரம்பிக்கப்பட்ட செலான் ‘பஹசர’நூலகத் திட்டம், செலான் வங்கியின் நீண்டகால சமூக நிலைபேறாண்மை முயற்சியாக நிலைத்து நிற்கின்றது. இத் திட்டத்தின் ஊடாக நூலக உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமும் அத்தியாவசிய கற்றல் கருவிகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதன் மூலமும் செலான் வங்கி நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. வங்கி அதன் 300ஆவது ‘பஹசர’ நூலகத்தை நோக்கி உறுதியாக முன்னேறி வரும் நிலையில் இந்த மைல்கல் ‘பஹசர’ பயணத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும். இது அறிவைக் கட்டியெழுப்பல், நிதி கல்வியறிவை வளர்த்தல் மற்றும் இலங்கை முழுவதும் நீடித்த சமூக தாக்கத்தை ஏற்படுத்தல் ஆகியவற்றிற்கான செலான் வங்கியின் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title