Header Logo
Mogo Academy

விளையாட்டு
டி20 உலகக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறியது ஆப்கானிஸ்தான்

Feb 17, 2026 - 04:04 PM -

0

டி20 உலகக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறியது ஆப்கானிஸ்தான்
Mobitel inner

டி20 உலகக் கிண்ண 2026 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 31 ஆவது போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கனடா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியன. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கனடா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 

இதைத் தொடர்ந்து களமிறங்கிய கனடா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக யுவராஜ் சம்ரா 110 ஓட்டங்களை பெற்றார்ள. 

174 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களை பெற்றது. 

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனால் இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி உலகக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறியது. 

2024 ஆம் ஆண்டு டி20 உலக கிண்ண தொடரில் அரையிறுதிக்கு சென்ற ஆப்கானிஸ்தான் அணி நடப்பு தொடரில் குரூப் சுற்றுடன் வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

குரூப் D பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகளில் விளையாடி 1 இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara