Feb 17, 2026 - 06:23 PM -
0
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களால் இன்று (17) எதிர்ப்பு பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த எதிர்ப்புப் பேரணி காரணமாக, பல்கலைக்கழகத்திற்கு அருகில் சில மணிநேரம் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தன்னிச்சையான முறையில் பல்கலைக்கழக மாணவர்களை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக, கொழும்பு பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவர் ஹிமிசர தெனுவன் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களுக்குள் மாணவர்கள் ஏதேனும் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்வதாயின், அதனை பல்கலைக்கழக நிர்வாகம் ஒழுங்குபடுத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நிபந்தனை விதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கு மாணவர்கள் உடன்படவில்லை என்றும், இந்தச் செயற்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்படுமானால் அதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளிலும் பல சிக்கல்கள் நிலவுவதாக ஹிமிசர தெனுவன் மேலும் குறிப்பிட்டார்.

