செய்திகள்
இங்கிலாந்து கிரிக்கெட் குழாம் நாட்டுக்கு

Feb 17, 2026 - 09:47 PM -

0

இங்கிலாந்து கிரிக்கெட் குழாம் நாட்டுக்கு

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் (Super-8) சுற்றில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்பதற்காக, இங்கிலாந்து கிரிக்கெட் குழாம் இலங்கையை வந்தடைந்துள்ளது. 

இந்தியாவின் கொல்கத்தாவிலிருந்து இன்று (17) மாலை 4.15 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் இந்த குழாம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 

வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 32 பேர் அடங்கிய குழுவினர் அதில் அடங்குகின்றனர். 

டி20 உலகக் கிண்ணத் தொடரின் 'சூப்பர் 8' சுற்றில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டியை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05