செய்திகள்
தீர்மானத்தில் இருந்து பின்வாங்கிய லொகோமோடிவ் ரயில் சாரதிகள்

Feb 17, 2026 - 10:23 PM -

0

தீர்மானத்தில் இருந்து பின்வாங்கிய லொகோமோடிவ் ரயில் சாரதிகள்

இன்று நள்ளிரவு முதல் தாம் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதாக லொகோமோடிவ் ரயில் சாரதிகள் அறிவித்துள்ளனர். 

ரயில் லொகோமோடிவ் பொறியியலாளர் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. 

ரயில் சாரதி சேவைக்குப் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட சாரதிகளுக்கான குழுவில், இராணுவ அதிகாரிகள் குழுவொன்றுக்கும் ரயில் சாரதிப் பயிற்சி அளிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் இன்று நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலகத் தீர்மானித்தனர். 

எனினும் அவ்வாறு பயிற்சியில் ஈடுபடவிருந்த 20 இராணுவ அதிகாரிகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் தெரிவித்தார். 

இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் தாம் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதாக லொகோமோடிவ் ரயில் சாரதிகள் அறிவித்துள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05