Feb 17, 2026 - 10:36 PM -
0
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய (17) ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நேபாளம் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நேபாளம் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.
ஸ்கொட்லாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் மிட்செல் ஜோன்ஸ் 71 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
இந்நிலையில் 171 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய நேபாளம் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.
நேபாளம் அணி சார்பில் திபேந்திர சிங் ஐரி 23 பந்துகளில் 50 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

