Header Logo

சினிமா
ரஜினிக்கு சொன்ன கதையில் இப்போது சூர்யா

Feb 18, 2026 - 11:05 AM -

0

ரஜினிக்கு சொன்ன கதையில் இப்போது சூர்யா

கருப்பு, சூர்யா 46 & 47 என தொடர்ந்து மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார் சூர்யா. இதில் கருப்பு திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. தமிழக தேர்தல் முடிந்தபின் இப்படம் வெளிவரும் என படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார். 

சூர்யா 46 மற்றும் 47 ஆகிய படங்களின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூர்யா 47 படத்தில் நடிகர் சூர்யா மீண்டும் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், சூர்யா அடுத்ததாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அஸ்வத் மாரிமுத்து தற்போது சிம்புவை வைத்து GOD Of Love என்கிற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான அறிவிப்பு வெளிவந்த நிலையில், முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையில் ரஜினியிடம் ஒரு கதை கூறியிருந்தார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. கதை பிடித்திருந்தாலும் ரஜினி - அஸ்வத் மாரிமுத்து இணையும் படம் டேக்ஆப் ஆகவில்லை. இந்த நிலையில், ரஜினிக்கு சொன்ன கதையை தற்போது சூர்யாவிடம் கூறி ஓகே செய்துள்ளாராம் அஸ்வத். 

இது கமர்ஷியல் என்டர்டெய்னிங் படமாக, அயன் படத்தில் இருக்கும் வைப் இப்படத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இது தற்போது திரை வட்டாரத்தில் உலா வரும் தகவல் மட்டும்தான், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கடந்த ஆண்டு டிராகன் எனும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title