சினிமா
நடிகையின் தற்கொலைக்கு 24 ஆண்டுக்கு பின் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு

Feb 18, 2026 - 01:38 PM -

0

நடிகையின் தற்கொலைக்கு 24 ஆண்டுக்கு பின் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு

இந்தியாவின் தெலுங்கானாவில் பிறந்து தன்னுடைய 18 வயதில் மோகன்பாபுவுடன் ராயுடு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை பிரத்யுஷா. ஸ்ரீ ராமாலையா, சமுத்திரம் என அடுத்தடுத்த படங்களில் நடித்தவர் முரளியுடன் மனுநீதி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார். 

அதன்பின் சூப்பர் குடும்பம், விஜயகாந்துடன் தவசி, ராமராஜுடன் பொன்னான நேரம், கடல் பூக்கள் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் பிரத்யுஷா. 

அடுத்தடுத்த பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் 2002 இல் தான் காதலித்து வந்த சித்தார்த் ரெட்டியுடன் காரில் இருந்தபடியே விஷயம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். 

இதில் சித்தார்த் உயிர் தப்பிய நிலையில் பிரத்யுஷா உயிரிழந்தார். தற்கொலைக்கு தூண்டியதாக கூறி சித்தார்த் ரெட்டிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சித்தார்த் ரெட்டி தரப்பினர் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதில் 2011 இல் ஆந்திர நீதிமன்றம் அவரது தண்டனையை இரு ஆண்டாக குறைத்து 50,000 ரூபாய் அபராதம் விதித்தது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து பிரத்யுஷாவின் தாயார் 2012 இல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் தன்னுடைய மகளை தற்கொலை செய்துக்கொள்ள தூண்டியது சித்தார் ரெட்டி என்றும் திட்டமிட்ட கொலை என்றும் வாதிட்டனர். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பு திகதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். 

இந்நிலையில் 24 ஆண்டுகளுக்கு பின் நேற்று (17) இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சித்தார் ரெட்டி குற்றவாளி என தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் 4 வாரங்களுக்குள் அவர் சரணடைய வேண்டுமென உத்தரவிட்டது. மேலும், அவரின் இரு ஆண்டுகள் தண்டனை ரத்து செய்யப்பட்டு 5 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை பிரத்யுஷா விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொள்ள தூண்டுதலாக இருந்தது சித்தார்த் ரெட்டி தான் என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05