Feb 18, 2026 - 01:39 PM -
0
ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனமான Prime Group இன் கட்டுமானப் பிரிவான Prime Constructions (Pvt) Ltd (PCL), நிறுவப்பட்டு இரண்டரை வருடங்கள் எனும் குறுகிய காலப்பகுதியினுள், கட்டுமான தொழிற்துறை அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து (CIDA) C1 தரத்தை வெற்றிகரமாக பெற்றுள்ளது.
இலங்கையின் கட்டுமானத்துறையில் நம்பிக்கையை வென்ற முன்னோடி நிறுவனம் எனும் நாமத்தை துரிதமாக எய்தியுள்ளமையை இந்த தரச் சான்று உறுதி செய்துள்ளது. Prime Constructions நிறுவனத்தின் பலமானது, இலங்கையின் நிர்மாணத்துறையை வடிவமைப்பதில் ஒரு உந்துசக்தியாக அதனை நிலைநிறுத்தியுள்ளது. Prime Group இன் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையின் பின்னணியுடன், இந்நிறுவனம் தனது செயற்பாடுகளில் நிகரற்ற நம்பிக்கையைப் பெற்றுள்ளது. உயர்தொழில்நுட்பத் தகைமை கொண்ட பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களைக் கொண்ட அதன் குழுவினர், ஒவ்வொரு திட்டத்திற்கும் தமது பரந்த அனுபவத்தைப் பங்களிப்பதன் ஊடாக, ஆரம்பம் முதல் முடிவு வரை தரமான வேலைப்பாடுகளையும் பயனுள்ள நிர்வாகத்தையும் உறுதிப்படுத்துகின்றனர்.
திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்வதில் கொண்டுள்ள உறுதிப்பாட்டின் மூலம், தரத்தில் எவ்வித சமரசமும் இன்றி நிர்ணயிக்கப்பட்ட காலப் பகுதியினுள் பணிகளை பூர்த்திசெய்து கொடுக்கும் நம்பகத்தன்மைமிக்க ஒரு நிறுவனமாக Prime Constructions பெயர்பெற்றுள்ளது. மேலும், வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்துதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயன்முறை ஊடாகப் போட்டித்தன்மைமிக்க விலைகளை வழங்குவது, தரம் மற்றும் பெறுமதி ஆகிய இரண்டையும் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நம்பிக்கையான பங்காளராக இந்நிறுவனத்தை மாற்றியுள்ளது.
CIDA அங்கீகாரமானது நிறுவனத்தின் செயல்பாட்டு வலிமையை உறுதிப்படுத்துவதுடன், அதன் நம்பகத்தன்மையையும் மேலும் மெருகூட்டுகின்றது. அத்துடன், இந்த CIDA தரப்படுத்தல் ஊடாக, பாரிய அளவிலான திட்டங்களுக்கான விலைமனுக்கோரல்களில் (Bidding) ஒரு போட்டித்தன்மைமிக்க முன்னிலையை PCL பெற்றுள்ளது. இது, அதீத சவால்கள் நிறைந்த ஒரு தொழில்துறையில் நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பாதையை மேலும் பலப்படுத்துகின்றது.
Prime Constructions இன் பொது முகாமையாளர் பொறியியலாளர் சுஜித் ரூபசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,
“வெறும் இரண்டரை ஆண்டுகளில் C1 தரத்தைப் பெற்றுக்கொண்டமையானது, PCL குழுமத்தின் அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவத்திற்கு ஒரு வலுவான சான்றாகும். குழுமத்தின் தவிசாளர் மற்றும் இணைத் தலைமை அதிகாரி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், இலங்கையின் காணி மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுத் துறையின் முன்னோடியான Prime Group வழங்கிய அளவிட முடியாத ஆதரவு இந்த பயணத்தில் அளப்பரியதாக அமைந்துள்ளது. இந்த CIDA அங்கீகாரமானது, கட்டுமானத் துறையில் ஒரு நம்பகமான பெயராக PCL இன் அந்தஸ்தை உயர்த்துவதுடன், எதிர்வரும் ஆண்டுகளில் இன்னும் உயர்ந்த இலக்குகளை அடைவதற்கு எமக்கு ஊக்கமளிக்கிறது. இன்று, Prime Constructions நிதி ஸ்திரத்தன்மை மற்றும் தொழில்நுட்பச் சிறப்பு ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்கும் நாட்டின் மிகவும் நம்பகமான மற்றும் ஆற்றல்மிக்க ஒப்பந்ததாரர்களில் ஒன்றாகத் திகழ்கிறது.” என்றார்.
Prime Constructions ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல், குடியிருப்புத் தொடர்மாடி அடுக்குமாடிகள் மற்றும் வீட்டுத்திட்டங்களின் முழுமையான மேம்பாட்டுப் பணிகளில் நிபுணத்துவம் பெற்று விளங்குவதுடன், கட்டமைப்பு மற்றும் இயந்திர, மின்சார, நீர் வழங்கல் (MEP) பணிகளை உள்ளடக்கிய முழுமையான ஒருங்கிணைந்த தீர்வுகளை வழங்கி வருகின்றது. கம்பஹாவிலுள்ள ‘The Palace’, தெஹிவளை மெரைன் டிரைவில் அமைந்துள்ள ‘43 By the Sea’, காசல் வீதியிலுள்ள Castle Street Warehouse மற்றும் NIIBS பிக்குணி விடுதித் திட்டம் போன்ற பல குறிப்பிடத்தக்க அடையாளத் திட்டங்களை இந்நிறுவனம் ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
PCL நிறுவனத்தின் தற்போதைய வலுவான திட்டப்பணிகளில் Colombo Border இல் நிர்மாணிக்கப்படும் இரட்டைக் கோபுரங்கள், பொரளையில் ‘The Seasons’, அதுருகிரியவில் ‘Shine On’ மற்றும் கொட்டாவயில் ‘Skye Blossom’ போன்ற பாரிய மற்றும் தனித்துவமான நிர்மாணத் திட்டங்கள் உள்ளடங்குகின்றன.
இலங்கை கட்டுமான தொழிற்துறை அபிவிருத்தி அதிகாரசபையினால் நிர்வகிக்கப்படும் இந்த CIDA தரப்படுத்தல் முறையானது, ஒப்பந்ததாரர்களின் நிதி வலிமை, தொழில்நுட்ப நிபுணத்துவம், ஊழியர் கட்டமைப்பு, உபகரணங்கள் மற்றும் திட்ட அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களை மதிப்பீடு செய்கின்றது.

