Feb 18, 2026 - 01:50 PM -
0
இலங்கையில் 100% Antibiotic-free கோழி இறைச்சியை உற்பத்தி செய்யும் ஒரேயொரு நிறுவனமான New Anthoney’s Farms (Pvt) Ltd., தனது உற்பத்திச் செயல்முறைகளில் antibiotic வகைகள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை கடுமையான ஆய்வுகூடப் பரிசோதனைகள் மூலம் சுயாதீனமான முறையில் உறுதிப்படுத்துவதற்காக, பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் ஐந்து ஆண்டுகால புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக, தனது முழுமையான உற்பத்திச் சங்கிலியையும் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழக ஆய்வுகூட வசதியொன்றின் ஊடாக தொடர்ச்சியான அறிவியல் ரீதியான பரிசோதனை உறுதிப்படுத்தலுக்கு உட்படுத்தும் இலங்கையின் முதலாவது மற்றும் ஒரேயொரு கோழி இறைச்சி உற்பத்தியாளராக New Anthoney's நிறுவனம் திகழ்கின்றது. இது இத்துறையிலான வெறும் உரிமைக்கோரல்களைத் தாண்டி, ஆய்வுகூட ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஆவணப்படுத்தப்பட்ட உண்மையாக இதனை மாற்றியமைக்கின்றது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் காணப்படும் ஒரேயொரு ISO/IEC 17025 அங்கீகாரம் பெற்ற ஆய்வுகூடமான, பேராதனைப் பல்கலைக்கழக கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பீடத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர உறுதிப்பாட்டு ஆய்வுகூடம் (FSQAL-UPDN), கோழி வளர்ப்பின் வெவ்வேறு கட்டங்களில் இறைச்சி மாதிரிகளை முறையான சோதனைக்கு உட்படுத்தும். இதன் மூலம் உற்பத்தியில் antibiotics முற்றிலும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் சார்பாக உப வேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் மற்றும் பதில் பதிவாளர் நாயகம் கே.ஏ.பி. தமுனுபொல ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதுடன், New Anthoney's Farms சார்பாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் எமில் ஸ்டான்லி கைச்சாத்திட்டர். பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் சுரவீர மற்றும் கலாநிதி. லஹிரு சந்தருவன் ஆகியோருடன் FSQAL-UPDN ஐ பிரதிநிதித்துவப்படுத்தி கலாநிதி. மதுர முனசிங்க மற்றும் பேராசிரியர் ருச்சிக பெர்னான்டோ ஆகியோர் இந்நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.
தீவனம் முதல் பண்ணை வரை மற்றும் இறுதி உற்பத்திப் பொருள் என எவ்விதமான கட்டத்திலும் antibiotics பயன்படுத்தப்படுவதில்லை என்பதை நாம் பல ஆண்டுகளாகக் கூறி வருகின்றோம். தற்போது, இலங்கையின் முன்னணி கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் சுயாதீனமான உறுதிப்படுத்தல் மூலம் அதனை நாம் நிரூபித்துக் காட்டுகின்றோம், இது சந்தைப்படுத்தல் தொடர்பானது மாத்திரமல்ல, இது சான்றுகள் தொடர்பானது. நுகர்வோர் எவரது வார்த்தையையும் அப்படியே நம்ப வேண்டிய அவசியமில்லை. அதற்கான ஆதாரத்தைப் பெற்றுக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு." என சுரவீர தெரிவித்தார்.
Antimicrobial resistance - AMR என்பது உலகின் மிக அவசரமான பொது சுகாதார அச்சுறுத்தல்களில் ஒன்றாக உருவெடுத்து வரும் நிலையில், இந்தச் சுயாதீனமான உறுதிப்படுத்தலை மேற்கொள்ளும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின், 2050 ஆம் ஆண்டளவில் AMR காரணமாக ஆண்டுதோறும் 10 மில்லியன் உயிர்கள் பலியாகக்கூடும் எனவும், 100 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இழப்புகள் ஏற்படக்கூடும் எனவும் உலகளாவிய மதிப்பீடுகள் எச்சரிக்கின்றன.
New Anthoney's நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் தனது முழுமையான உற்பத்திச் சங்கிலியிலிருந்தும் antibiotics பாவனையை முற்றாக நீக்கியதுடன், அவ்வாறு செய்த இலங்கையின் முதலாவது மற்றும் ஒரேயொரு கோழி இறைச்சி உற்பத்தியாளராகவும் மாறியது. ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், இன்றும் அந்த நிலையைத் தக்கவைத்துள்ள ஒரே நிறுவனமாக இது விளங்குகின்றது. antibiotics இன்றி கோழி இறைச்சியை உற்பத்தி செய்வதற்கு மேம்பட்ட Biosecurity, நிறுவனத்தின் உள்ளக கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களால் உருவாக்கப்பட்ட விசேட ஊட்டச்சத்துத் திட்டங்கள், Probiotics மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளிட்ட மாற்று சுகாதார மேலாண்மை உத்திகள், தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் அதிக உற்பத்திச் செலவுகளை ஏற்றுக்கொள்வது என்பன அவசியமாகும். நாம் செய்வது கடினமானது மற்றும் அதிக செலவு மிக்கது. ஆனால், நாம் எதுவுமே செய்யாமல் இருப்பதற்கான விலையானது மனித உயிர்களால் அளவிடப்படுகின்றது, என சுரவீர தெரிவித்தார்.
1986 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட New Anthoney's நிறுவனம், FSSC 22000 தரச் சான்றிதழைப் பெற்றுக்கொண்ட இலங்கையின் முதலாவது கோழி இறைச்சி உற்பத்தியாளராகத் திகழ்வதுடன், Control Union அமைப்பிலிருந்து பசுமை இல்ல வாயு வெளியேற்றம் தொடர்பான ISO 14064-1:2018 உறுதிப்படுத்தலையும் பெற்றுள்ளது. அத்துடன், அமெரிக்காவின் தேசிய கோழி இறைச்சிச் சபையிடமிருந்து விலங்கு நலச் சான்றிதழைப் பெற்றுள்ள இந்நிறுவனம், நிலைபேறான அமெரிக்க சோயா (Sustainable U.S. Soy) முத்திரையைப் பயன்படுத்தும் தெற்காசியா மற்றும் துணை சஹாரா ஆபிரிக்க பிராந்தியத்தின் முதலாவது நிறுவனமுமாகும். அதன் ‘ஹரிதஹரி’ வர்த்தக நாமமானது, இலங்கையின் கோழி இறைச்சித் துறையில் முதன்முறையாக 100% உக்கும் தன்மையுடைய பொதியிடல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிறுவனத்தின் அர்ப்பணிப்பு வெறும் உற்பத்தியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், New Anthoney's நிறுவனம் சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் Forum on Antimicrobial Resistance மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள், சுகாதாரத் துறை வல்லுநர்கள், கால்நடை மருத்துவ நிபுணர்கள் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள் என 100-க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் ஒன்றிணைக்கப்பட்டனர். மேலும், இந்நிறுவனம் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து AMR தொடர்பான விழிப்புணர்வு அமர்வுகளை நடத்தியுள்ளதுடன், ஊழியர்களுக்கான விரிவான கல்வித் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.
பேராதனைப் பல்கலைக்கழகத்துடனான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது, இலங்கையின் கோழி இறைச்சித் துறையில் முன்னெப்போதும் இல்லாத ஒரு சரிபார்ப்புக் கட்டமைப்பை நிறுவுகிறது. இதன் மூலம் நிறுவனத்தின் ஒவ்வொரு உரிமைக்கோரலும் ஆய்வுகூடத் தரவுகளால் உறுதிப்படுத்தப்படுவதுடன், ஒவ்வொரு உற்பத்திச் சுழற்சியும் சுயாதீனமான ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. இதன் விளைவாக, நுகர்வோர் நம்பிக்கை என்பது வெறும் சந்தைப்படுத்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில் அமையாமல், அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படுகின்றது. நீண்டகாலமாக antibiotic களின் பயன்பாட்டை நம்பியிருக்கும் ஒரு தொழில்துறையில், New Anthoney's நிறுவனம் மாற்று வழியொன்றை தொடர்ச்சியாக நிரூபித்து வருகின்றது. இது கடினமானது என்பதுடன், அதிக செலவு மிக்கதாக இருந்த போதிலும், இறுதியில் பொறுப்புணர்வுடன் முன்னேறுவதற்கான ஒரே வழியாக அமைந்துள்ளது.

