செய்திகள்
அக்குரேகொட கொலை வழக்கு: சகோதரர்கள் விளக்கமறியலில்

Feb 18, 2026 - 03:36 PM -

0

அக்குரேகொட கொலை வழக்கு: சகோதரர்கள் விளக்கமறியலில்

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சகோதரர்கள் இருவரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

 

இன்று (18) குறித்த இரு சந்தேகநபர்களும் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

அத்துடன், நேற்று கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேகநபரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் தலங்கம, அக்குரேகொட பகுதியில் வைத்து இந்தச் சட்டத்தரணியும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 

 

அதனைத் தொடர்ந்து, பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 12 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

 

அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கொலையாளிகள் பயன்படுத்திய துப்பாக்கிகளைக் கடத்திச் சென்ற இரண்டு சகோதரர்கள் கடந்த 16ஆம் திகதி பிற்பகல் கொட்டாவை பகுதியில் வைத்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

 

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், நேற்று (17) பிற்பகல் பொல்கஸ்ஓவிட்ட பகுதியில் வைத்து 'பொல்கஸ்ஓவிட்ட டிலா' எனப்படும் நபர் கைது செய்யப்பட்டார். 

 

அவரது ஆலோசனையின் பேரிலேயே குறித்த இரு இளைஞர்களும் துப்பாக்கிகளைக் கடத்தியுள்ளமையும், அதற்கு 'டிலா' என்பவரும் நேரடியாகப் பங்களித்துள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05