Header Logo
Mogo Academy

விளையாட்டு
டி20 உலகக் கிண்ணத்தில் சதம் விளாசிய 2 ஆவது பாகிஸ்தான் வீரர்!

Feb 18, 2026 - 05:44 PM -

0

டி20 உலகக் கிண்ணத்தில் சதம் விளாசிய 2 ஆவது பாகிஸ்தான் வீரர்!
Mobitel inner

டி20 உலகக் கிண்ண 2026 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 35 ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதுகிறது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 03 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களை பெற்றது. அதிகபட்சமாக பர்ஹான் 100 ஓட்டங்களை பெற்றார். 

இதன்மூலம் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த 2 ஆவது பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை பர்ஹான் படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக பங்களாதேஷிற்கு எதிராக அகமது ஷெஹ்சாத் சதம் விளாசி இருந்தார். 

மேலும் டி20 உலகக் கிண்ணத்தில் சதம் விளாசிய ஆசிய வீரர்களில் இவர் 6 ஆவது வீரராகவும் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக பங்களாதேஷ் அணியை சேர்ந்த தமீம் இக்பால், பாகிஸ்தானை சேர்ந்த அகமது ஷெஹ்சாத், இலங்கையை சேர்ந்த ஜயவர்த்தன, இந்தியாவை சேர்ந்த சுரேஷ் ரெய்னா, இலங்கையை சேர்ந்த பெத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் சாதனை பட்டியலில் உள்ளனர்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara