செய்திகள்
மத்தீஷவிற்கு பதில் டில்ஷான் மதுசங்க - ஐசிசி அனுமதி!

Feb 18, 2026 - 06:31 PM -

0

மத்தீஷவிற்கு பதில் டில்ஷான் மதுசங்க - ஐசிசி அனுமதி!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண உபாதை காரணமாகத் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக டில்ஷான் மதுசங்கவை அணியில் இணைத்துக்கொள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை உத்தியோகபூர்வ அனுமதியை வழங்கியுள்ளது. 

ஐசிசியின் தொழில்நுட்பக் குழு இந்த மாற்றத்திற்கான அங்கீகாரத்தை இன்று வழங்கியுள்ளது. 

மதீஷ பத்திரணவுக்குத் தோள்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக, அவர் தொடரில் தொடர்ந்து பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய அவர் ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால், அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் கோரிக்கையை ஐசிசி ஏற்றுக் கொண்டதை அடுத்து, இடதுகை வேகப்பந்து வீச்சாளரான டில்ஷான் மதுசங்க இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு வரிசையை வலுப்படுத்த அணியில் இணைகிறார். 

நாளை (19) சிம்பாப்வே அணியுடன் நடைபெறவுள்ள முக்கியமான போட்டிக்கு முன்னதாக, அணியின் முக்கிய பந்துவீச்சாளரான மதீஷ பத்திரணவின் விலகல் இலங்கை அணிக்குப் பின்னடைவாகக் கருதப்பட்டாலும், அனுபவம் வாய்ந்த டில்ஷான் மதுசங்கவின் வருகை அணிக்குப் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05