Feb 18, 2026 - 08:53 PM -
0
2026 டி20 உலகக்கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் தற்போது நடைபெற்றுவரும் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நெதர்லாந்து அணிக்கு 194 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய சிவம் துபே 31 பந்துகளில் 66 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் 34 ஓட்டங்களைப் பெற்றார். ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அபிஷேக் சர்மா ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
நெதர்லாந்து அணி சார்பில் ஆர்யன் தத் 2 விக்கெட்டுக்களையும் மற்றும் லோகன் வான் பீக் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இன்னும் சற்று நேரத்தில் 194 என்ற வெற்றி இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடவுள்ளது.

