Feb 18, 2026 - 10:38 PM -
0
2026 டி20 உலகக்கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற போட்டியில், இந்தியா அணி 17 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய சிவம் துபே 31 பந்துகளில் 66 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் 34 ஓட்டங்களைப் பெற்றார். ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அபிஷேக் சர்மா ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
நெதர்லாந்து அணி சார்பில் ஆர்யன் தத் 2 விக்கெட்டுக்களையும் மற்றும் லோகன் வான் பீக் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
அதன்படி, 194 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
அவ்வணி சார்பில் பாஸ் டி லீட் அதிகபட்சமாக 33 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் வருண் சக்கரவர்த்தி மூன்று விக்கெட்டுக்களையும், சிவம் துபே 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இவ்வெற்றியுடன் குழு ஏ யில் இந்தியா விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

