Feb 19, 2026 - 11:35 AM -
0
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம், நேற்று (18) ஆம் திகதி அறிக்கையின்படி, குற்றச் செயல்களுடன் நேரடியாக அடையாளம் காணப்பட்ட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் மதுபோதையில் வாகனம் செலுத்திய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சந்தேகத்தின் பேரில் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 185 என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் முழுமையான அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது:
பரிசோதனை செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை - 29,608
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை - 549
குற்றச் செயல்கள் தொடர்பில் நேரடியாக அடையாளம் காணப்பட்ட நபர்களின் எண்ணிக்கை - 26
கைது செய்யப்பட்ட தினப் பிடியாணை உள்ளவர்களின் எண்ணிக்கை - 334
கைது செய்யப்பட்ட திறந்த பிடியாணை உள்ளவர்களின் எண்ணிக்கை - 185
மதுபோதையில் வாகனம் செலுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டவர்கள் -- 309
அலட்சியமாக வாகனம் செலுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டவர்கள் - 44
ஏனைய போக்குவரத்து குற்றங்கள் - 4,392

