Feb 19, 2026 - 12:45 PM -
0
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 37-வது லீக் போட்டியில், இத்தாலி அணிக்கு வெற்றி இலக்காக 166 ஓட்டங்களை மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயித்துள்ளது.
இந்தியாவின் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று (19) காலை 11.00 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணித் தலைவர் ஹாரி மனென்டி முதலில் பந்துவீசத் தீர்மானித்தார்.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைக் குவித்தது.
அணியின் துடுப்பாட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப் 46 பந்துகளில் 75 ஓட்டங்களைக் குவித்து அசத்தினார்.
இறுதி ஓவர்களில் களமிறங்கிய ஷெர்பேன் ரூதர்போர்ட் மற்றும் மேத்யூ போர்ட் ஆகியோர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
இத்தாலி அணி சார்பில் சிறப்பாகப் பந்துவீசிய கிரிஷன் களுகமகே தனது 4 ஓவர்களில் 25 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
அதன்படி, 166 ஓட்டங்கள் என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கி இத்தாலி அணி தனது துடுப்பாட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.

