Feb 20, 2026 - 09:21 AM -
0
இலங்கையின் மதுபான உற்பத்தித் துறையில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட முன்னனி நிறுவனங்களில் ஒன்றான இன்டர்நஷனல் டிஸ்டிலர்ஸ் லிமிடட் (International Distillers Limited - IDL), 2026 ஆம் ஆண்டுக்கான ஸி.ஐ.பி.எம் பிரம்மாண்ட மனிதவள வினாடி வினாப் போட்டியில் (CIPM Great HR Quiz 2026) ஒட்டுமொத்த வெற்றியையும் பெற்றமை நிறுவனத்தின் வெற்றிப்பாதையின் மையில்கல்லாக அமைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இப்போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்ற ஐ.டி.எல் (IDL) நிறுவனம், அனைத்துத் துறைகளையும் சேர்ந்த 74 அனுபவம் வாய்ந்த மனிதவளக் குழுக்களைத் தோற்கடித்து இந்த வெற்றியை ஈட்டியுள்ளது. ஒட்டுமொத்த வெற்றியாளராகத் தெரிவானதுடன், உணவு, பானங்கள் மற்றும் மதுபான உற்பத்தி (Food, Beverage and Distillery) வகைப்பாட்டிலும் முதலிடத்தைப் பிடித்து ஐ.டி.எல் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
லண்டனின் புகழ்பெற்ற கில்பிஸ் (Gilbey’s) நிறுவனத்தின் கிளை நிறுவனமாக 1980 ஆம் ஆண்டு ‘கில்பிஸ் லங்கா லிமிடட்’ (Gilbey's Lanka Limited) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், உலகத்தரம் வாய்ந்த வடித்திறக்கல் நிபுணத்துவம் மற்றும் கடுமையான தரக்கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தனது அடித்தளத்தை அமைத்தது. 2004 ஆம் ஆண்டில் ஈஸ்ட் இந்தியா ஹோல்டிங்ஸ் (East India Holdings (Pvt) Ltd, நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மூலோபாய ரீதியான மாற்றங்களுக்கு உள்ளானது. முதலில் ‘ஐ.டி லங்கா லிமிடட்’ (ID Lanka Limited) என மறுபெயரிடப்பட்டு, பின்னர் 2014 ஆம் ஆண்டில் தற்போதுள்ள ‘இன்டர்நஷனல் டிஸ்டிலர்ஸ் லிமிடட்’ (IDL) எனும் அடையாளத்தைப் பெற்றுக்கொண்டது. இன்று, பல ISO சான்றிதழ்களைக் கொண்ட அதிநவீன உற்பத்தி வசதிகளுடன், அரக்கு, விஸ்கி, பிராந்தி, ரம், ஜின் மற்றும் வொட்கா உள்ளிட்ட பலதரப்பட்ட உயர்தர மதுபானங்களை உற்பத்தி செய்யும் இலங்கையின் மிகப்பெரிய உள்நாட்டு வெளிநாட்டு மதுபான உற்பத்தியாளராக IDL திகழ்கிறது.
இலங்கை ஸி.ஐ.பி.எம் (Chartered Institute of Personnel Management - CIPM) நிறுவனத்தினால் 2014 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிரம்மாண்ட மனிதவள வினாடி வினா’ (Great HR Quiz), மனிதவள முகாமைத்துவத்திற்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட நாட்டின் ஒரே தேசிய அளவிலான வினாடி வினாப் போட்டியாகும். 2026 ஆம் ஆண்டு பதிப்பானது, முன்னெப்போதையும் விட சவாலான புதிய வடிவத்துடன் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இம்முறை வெறும் அறிவு சார்ந்த கேள்விகளுக்கு அப்பால், நிஜ வாழ்க்கை மனிதவளச் சூழல்கள் (Real-life HR situations), முடிவெடுத்தல், பிரச்சினைகளைத் தீர்த்தல் மற்றும் ஊழியர் வாழ்க்கைச் சுழற்சி தொடர்பான மூலோபாய சிந்தனைகளைச் சோதிக்கும் வகையில் போட்டி அமைந்திருந்தது.
முதன்முறையாகப் பங்கேற்ற போதிலும், ஐ.டி.எல் (IDL) நிறுவனம் மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தியது. நன்கு நிலைநிறுத்தப்பட்ட நிறுவனங்களின் அனுபவம் வாய்ந்த குழுக்களுடன் போட்டியிட்ட போதிலும், ஐ.டி.எல் குழுவினர் அசாத்திய நம்பிக்கை, தெளிவு மற்றும் வலுவான குழுப்பணியை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த வெற்றியாளராக உருவெடுத்தனர். ஹன்சானி இலங்ககோன், சாமிந்த டி சேரம், பிரசாத் குணதிலக மற்றும் அஷான் மாரவீரஹேவா ஆகியோரே இந்த வெற்றிக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். முறையான தயாரிப்பு, அழுத்தங்களுக்கு மத்தியிலும் தெளிவான சிந்தனை மற்றும் தடையற்ற ஒருங்கிணைப்பு ஆகியவையே இவர்களின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தன. இது தொடர்ச்சியான கற்றல், குழுப்பணி மற்றும் நிஜ வணிகச் சூழல்களில் மனிதவள அறிவைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் IDL கொண்டுள்ள முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.
இந்த சாதனை குறித்து ஐ.டி.எல் (IDL) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) ஜனக் ஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில்:
எமது முதல் முயற்சியிலேயே CIPM பிரம்மாண்ட மனிதவள வினாடி வினாவில் வெற்றி பெற்றமை எமது பணியாளர்களின் தரம் மற்றும் திறமைக்கு சான்றாகும். இந்த வெற்றி எமது மனிதவளக் குழுவிற்கு மட்டுமானது அல்ல; இது எமது நிறுவனத்தின் சிறந்து விளங்கும் கலாச்சாரம், மூலோபாய சிந்தனை மற்றும் எமது மிக உயர்ந்த சொத்தான மனித வளத்தை மேம்படுத்துவதில் எமக்குள்ள அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. வணிகச் செயற்பாடுகளைத் தூண்டும் மற்றும் நிலையான போட்டி நன்மைகளை உருவாக்கும் உலகத்தரம் வாய்ந்த மனிதவளச் செயல்பாட்டை உருவாக்குவதில் நாம் செய்யும் முதலீட்டை இந்த வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது.
ஐ.டி.எல் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி (CHRO) ரோஹித அமரபால குறிப்பிடுகையில்:
இந்த வெற்றியானது எமது மனிதவளக் குழுவின் ஆற்றல் மற்றும் அவர்களின் சிறப்பான அர்ப்பணிப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். IDL இல் நாம் கட்டியெழுப்பியுள்ள வலுவான மனிதவள முகாமைத்துவ நடைமுறைகளை இது நிரூபிக்கிறது. சிக்கலான நிஜ உலகச் சூழல்களுக்கு மூலோபாய மனிதவளச் சிந்தனையைப் பயன்படுத்தும் எமது குழுவின் திறன், எமது நிபுணத்துவத்தின் ஆழத்தைக் காட்டுகிறது. ஹன்சானி, சாமிந்த, பிரசாத் மற்றும் அஷான் ஆகியோரின் சிறப்பான செயல்பாட்டிற்காகவும், ஐ.டி.எல் நிறுவனத்தைப் பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காகவும் நான் பெருமிதம் கொள்கிறேன்.
இந்த மாபெரும் வெற்றயானது, தனது ஊழியர்களை மேம்படுத்துவதிலும், உயர் செயல்திறன் கொண்ட குழுக்களை உருவாக்குவதிலும் மூலோபாய ரீதியாக முதலீடு செய்யும் ஒரு நிறுவனமாக ஐ.டி.எல் (IDL) இன் நிலையை மேலும் பலப்படுத்துகிறது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற உயர்தர அரக்கு வகைகள் மற்றும் ஐரோப்பா, அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் வட அமெரிக்கா என விரிவடைந்து வரும் ஏற்றுமதி வர்த்தகத்துடன், ஐ.டி.எல் இலங்கையின் தனித்துவமான வெற்றிக் கதையாகத் தொடர்ந்து பயணிக்கிறது.
உலகத்தரம் வாய்ந்த மதுபானங்களை உற்பத்தி செய்வதில் மட்டுமல்லாமல், இலங்கையின் போட்டித்தன்மை வாய்ந்த வணிகச் சூழலில் நிறுவன வெற்றியைத் தேடித்தரும் உலகத்தரம் வாய்ந்த குழுக்களை உருவாக்குவதிலும் ஐ.டி.எல் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த வெற்றி மீள உறுதிப்படுத்துகிறது.
